கைது செய்த பிறகு ஸ்டேஷன்ல என்ன நடந்தது தெரியுமா..? ஓப்பனாக கூறிய நடிகர் ஈஸ்வர்


சமீப காலமாக சினிமா மற்றும் சின்னத்திரை நடிகர் நடிகைகள் தங்களது திருமண வாழ்க்கையில் ஏற்படும் கருத்து வேறுபாட்டினால் விவாகரத்து செய்து கொள்வது வழக்கமாகிவிட்டது. 

அந்த வகையில் தற்போது சீரியல் நடிகர்கள் ஈஸ்வர் மற்றும் ஜெயஸ்ரீயின் விவகாரம் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. ஜெயஸ்ரீ தன் கணவர் மகாலட்சுமி என்ற நடிகையுடம் தொடர்பில் இருக்கிறார் எனவும் குழந்தையுடன் தகாத முறையில் நடந்து கொண்டார் என குற்றம் சாட்டினார். 

அந்த வகையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு நடந்த வாக்கு வாதத்தில் ஜெயஸ்ரீ-யை வயிற்றில் எட்டி உதைத்தால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார் ஜெயஸ்ரீ.

அதனை தொடர்ந்து, இரவோடு இரவாக போலீசார் ஈஸ்வரை கைது செய்தார்கள். இதற்கு பிறகு ஜாமீனில் வெளிவந்த ஈஸ்வர் சில விஷயங்களை கூறியுள்ளார். 

அவர் கூறியதாவது, ஜெயஸ்ரீயுடன் பிரச்சனை காரணமாக பரஸ்பரம் சட்டப்படி விவாகரத்து பெற்றுக்கொள்ளலாம் என கூறினேன். ஆனால், அதற்கு 70 லட்சம் செட்டில் செய்யவேண்டும் என ஜெயஸ்ரீ தரப்பு கேட்டது. 

ஆனால், நான் அதை நான் கொடுக்க முடியாது, நீதி மன்றத்தில் வழக்கு போடுவோம். பிறகு கோர்ட் சொல்வதை நான் செய்கிறேன் என கூறினேன். அதனால் தான் என் மீது கைது நடவடிக்கை எடுத்தனர்" என கூறியுள்ளார் அவர்.
------Advertisement------
------Advertisement------