நடிகைகள் திருமணம் என்றால் ஒருபக்கம் சந்தோஷம் தான். ஆனால் ரசிகர்களுக்கு தனது கனவுக் கன்னிக்கு திருமணம் முடிந்துவிட்டதா..? என ஷாக்கும் ஆவார்கள்.
இப்போது அடுத்தடுத்து முன்னணி நாயகிகளுக்கு திருமணம் நடந்து வருகிறது. அண்மையில் ரம்யா நம்பீசன் தனது டுவிட்டர் பக்கத்தில் கல்யாண கோலத்தில் இருக்கும் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
இணையத்தில் தீயாய் பரவிய அந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் உங்களுக்கு திருமணம் ஆகிவிட்டதா..? எப்போ நடந்தது.? யாரு மாப்பிள்ளை என கேள்விகளால் அவரை துளைத்தெடுக்க ஆரம்பித்து விட்டனர்.
இந்நிலையில், அந்த புகைப்படங்களை மீண்டும் பகிர்ந்துள்ள அவர், திருமணம் முடிந்துவிட்டதா?, எப்போது கல்யாணம்? இல்லவே இல்லை. இது ஒரு படத்துக்காக எடுக்கப்பட்ட புகைப்படம் என பதிலளித்துள்ளார்.
Marriage aayidcha?? When was your marriage?? NOOOOOOO !!! It’s just a still from my new movie #yuvanbadri3 @dirbadri @rio_raj pic.twitter.com/6TkqlOWPOD— Ramya Nambessan (@nambessan_ramya) December 13, 2019



