இந்த காரணத்தினால் தான் கவர்ச்சியாக நடித்தேன் - சின்னத்திரை நடிகை நீபா உருக்கம்.!


சின்னத்திரையில் பிரபலமான நடிகை நீபா மானாட மயிலாட என்ற நிகழ்ச்சி மூலம் பெருவாரியான ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். இதனை தொடர்ந்து, சில படங்களில் நடித்த அவர் கவர்ச்சியான கதாபாத்திரங்களில் நடித்தார்.

இந்நிலையில், சமீபத்தில் ஒரு பேட்டியில் பேசிய அவர், கவர்ச்சியாக நடித்து குறித்து சில உருக்கமான தகவல்களை வெளியிட்டுள்ளார். அவர் கூறியதாவது, நான் கவர்ச்சியாக நடிக்கவேண்டும் என்ற எண்ணத்தில் நடிக்கவில்லை. பெரிய பெரிய நடிகைகளும் கவர்ச்சியாக நடிக்கிறார்கள். ஆனால், என்னை போன்ற சின்ன நடிகைகள் கவர்ச்சியாக நடித்தால் மோசமாக கமெண்ட் செய்கிறார்கள்.

எனக்கும் குடும்பம் இருக்கின்றது. நீங்கள் என்னை பற்றி கூறும் மோசமான கருத்து என்னை மட்டுமல்லாமல் என்னுடைய குடும்பத்தையே சேர்த்து பாதிக்கிறது. நீங்கள் பதிவு செய்யும் கமெண்ட்டை நான் படிப்பேன். என் கணவர் படிப்பார். பின், என் குழந்தைகள் படிப்பார்கள். இதுஎவ்வவளவு வேதனையான விஷயம் தெரியுமா..? என்று உருக்கமாக கூறியுள்ளார்.

தொடர்ந்து பேசிய அவர், சினிமாவில் நான் கவர்ச்சியாக நடித்ததற்கு ஒரு காரணம் உள்ளது. என்னுடைய தந்தைக்கு உடல் நிலை சரியில்லை.கடைசி நேரத்தில் நான் அப்படி நடித்தால் தான் எனக்கு பணம் கிடைக்கும் என்ற கட்டாயத்தில் தான் நடித்தேன். இப்படி கவர்ச்சியாக நடிக்கும் ஒவ்வொருவரின் பின்னும் ஒரு கதை இருக்கிறது என்று பேசியுள்ளார் நீபா.