உலக அழகி பட்டம் வெல்வது ஒரு பக்கம் இருக்கட்டும். ஆனால், உலக அழகி போட்டியில் போட்டியாளராக கலந்து கொள்வதே ஒரு கௌரவமாக மாடல் அழகிகள் மத்தியில் கருதுகிறார்கள்.
அந்த வகையில்,தமிழ்நாட்டின் சேலம் மாவட்டத்தில் இருந்து உலகஅழகி போட்டிக்குகூடைப்பந்து வீராங்கனையும், மாடல் அழகியுமா ஸ்ருதி பெரியசாமி என்பவர் போட்டியாளராக கலந்து கொள்ளவுள்ளார்.
இவருடைய தந்தை இயற்கை எய்தி விட்டார். இவருடைய அம்மாவின் உதவியிலும், கூடைபந்தாட்டம் மூலம் தனக்கு வரும் உதவித்தொகை மூலமாக மட்டுமே தன்னுடைய பள்ளிப்படிப்பை முடித்துள்ளார்.
இவருடைய அம்மா தையல் தொழில் செய்து வருகிறார். கடந்த இரண்டு வருடங்களாக மாடலிங் துறையில் இருந்து வரும் இவர் தற்போது மிஸ் யுனிவர்ஸ் போட்டியில் பங்கேற்ற வுள்ளார்.இவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.


