சிவகார்த்திகேயனின் ஹீரோவாக நடித்த "ஹீரோ" படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்திருந்தவர் நடிகை கல்யாணி ப்ரியதர்ஷன்.
இவர் பிரபல இயக்குனர் ப்ரியதர்ஷன்-லிஸ்ஸி மகள் ஆவார். தமிழில் அறிமுகமாகும் முன்பு தெலுங்கில் சில திரைப்படங்களில் நடித்திருந்தாலும் தமிழில் ஹீரோ தான் முதல் படம்.
மேலும், இவர் தனது தந்தையான ப்ரியதர்ஷன் இயக்கிய "மரக்கார்" என்ற படத்திலும் ஒரு சிறிய ரோலில் நடித்துள்ளார். அந்த படத்திற்காக ஷூட்டிங் போன போது கல்யாணி சரியாக வசனம் பேசவில்லை என படக்குழுவினர் முன்பே ப்ரியதர்ஷன் மிக பயங்கரமாக திட்டினாராம்.
தன்னுடைய, மகள் தானே என்பதற்காக இப்படி அளவுக்கு அதிகமாக திட்டிவிட்டார். அதனால், இனி அப்பா இயக்கம் படங்களில் நடிக்ககூடாது என முடிவெடுத்துவிட்டேன் என கல்யாணி தெரிவித்துள்ளார்.


