"என்ன கஷ்டம் என்றாலும் விஜயிடம் தான் கூறுவேன் - என் வீடு கூட கடன் வாங்கி கட்டியது தான் " - சொன்னது யார் தெரியுமா.?


நடிகர்  ஷாந்தனு பாக்யராஜ் தான் இப்படி கூறியிருப்பது. விஜய்யின் தீவிர ரசிகரான இவர் இயக்குனர் பாக்யராஜின் மகனாவார். 

தொலைக்காட்சி நிகழ்சிகளில் அடிக்கடி கலந்து கொள்ளும் இவர் தொகுப்பாளினி கீர்த்தியை காதலித்து திருமணமும் செய்து கொண்டார்.

தற்போது, நடிகர் விஜய் மற்றும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகிவரும் "மாஸ்டர்" படத்தில் முக்கியமான கதாபாத்திரம் ஒன்றில் நடிக்கிறார். 

இவர்மட்டுமல்லாது விஜயின் நண்பர்கள் பலரும் பல கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்கள்.

சமீபத்தில் ஒரு பேட்டியில் பேசிய நடிகர் ஷாந்தனு பாக்யராஜ், " நான் என்ன கஷ்டம் என்றால் விஜய் அண்ணாவிடம் தான் முதலில் கூறுவேன். இப்போ நான் இருக்கும் வீடு கூட கடன் வாங்கி கட்டியது தான்" என்று வெளிப்படையாக கூறியுள்ளார்.