கேப்பார் பேச்சை கேட்டு கோடிகளை இழந்த நடிகை அனுஷ்கா..! - அடக்கொடுமைய..!


நடிகை அனுஷ்கா தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக வளம் வந்தவர். குடும்பப்பாங்கான வேடமோ, கவர்ச்சி வேடமோ, பிச்சு உதறுவார் அம்மணி. தமிழில், ரெண்டு என்ற படத்தில் அதிரி புதிரி கவர்ச்சி காட்டி இளசுகளின் நெஞ்சை கலங்கடித்தார் அம்மணி.

தொடர்ந்து பத்து ஆண்டுகளுக்கு மேலாக முன்ணணி நடிகையாக இருந்த இவருக்கு இஞ்சி இடுப்பழகி என்ற படத்தின் மூலம் வந்தது ஆப்பு. டெடிகேஷன் என்று கூறிக்கொண்டு கிடுகிடுவென உடல் எடையை கூட்டி குண்டானார் அம்மணி.

படம் வெளியாகி பல ஆண்டுகள் ஆகி விட்டாலும், அம்மணியின் உடல் முன்பு போல இல்லை. குண்டாக இருந்த அவர் இப்போது உடல் எடை குறைத்தகாரணத்தால் மேனியின் பளபளப்பு போய் விட்டது. இதனால், சொல்லிக்கொள்ளும்படி வாய்ப்புகளும் இல்லை.

இது ஒரு பக்கம் இருக்க கேப்பார் பேச்சை கேட்டுக்கொண்டு சில கோடிகளை இழந்துள்ளார் அம்மணி. ஐதராபாத்தில்முக்கியமான இடத்தில் நான்கு பெட்ரூம் கொண்ட ஒரு வீட்டை வாங்கியுள்ளார் அனுஷ்கா. ஆனால், தெலங்கானாவில் ஏற்பட்ட சொத்து மதிப்பு பிரச்சனையால் அந்த வீட்டை அவசர அவசரமாக ஐந்து கோடிக்கு தள்ளி விட்டுள்ளார்.ஆனால்,அவர் இந்த வீட்டை வாங்கியது 11கோடியே 50லட்சம் ரூபாய்க்கு என்கிறார்கள். 

இதனால், கிட்டதட்ட 6 கோடி இழப்பு. விட்டதை புடிக்கிறேன் என அவசர அவசரமாக விசாகப்பட்டினத்தில் நிலம் வாங்கியுள்ளார் அம்மணி.அதனை தொடர்ந்து, அமராவதியை தலைநகரமாக்க முயற்சி செய்து வரும் நிலையில் இனி விசாகப்பட்டின நிலமும் விலை ஏறாது என நினைத்துக்கொண்டு அதையும் பாதி விலைக்கு தள்ளி விட்டுள்ளார். இப்படி அடி மேல் அடி வாங்கிக்கொண்டு நொந்து போயுள்ளார் அம்மணி. 
Previous Post Next Post