மீசைய முறுக்கு படம் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் ஆத்மிகா.
தமிழ் திரையுலகில் ஒரு வருடத்தில் பல ஹீரோயின்கள் அறிமுகமாகின்றனர்.
அதில்
சிலர் மட்டுமே ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த நடிகையாக மாறுகின்றனர் அதில்
ஒருவர் தான் இந்த ஆத்மிகா.தன் முதல் படத்திலேயே முத்திரை பதித்தார் ஆத்மிகா.
இதில் இவர் நடித்த நிலா
கதாபாத்திரம் அனைவரையும் கவர்ந்தது. இதன் பின் கார்த்திக் நரேன் இயக்கிய
நரகாசுரன் படத்தில் நடித்தார் ஆத்மிகா, சில பல காரணங்களால் அந்த படம்
இன்னமும் ரிலீஸ் ஆகாமல் கிடப்பில் உள்ளது.
இந்த வருடம் (2020) மார்ச் மாதம் இந்த படம் வெளியாகும் என கூறுகிறார்கள். எல்லா நடிகைகளையும் போல ஆத்மிகாவும் அவ்வப்போது போட்டோஷுட்கள் எடுப்பது
வழக்கம். தற்போது படு கவர்ச்சியான புகைபடங்களை எடுத்து வெளியிட்டு உள்ளார்.
இதில், பிரபல கார்டூன் கதாபாத்திரமான டோரா போல ஆத்மிகா இருப்பதாகவும், ஜப்பான் பொம்மை போல இருக்கிறார் எனவும் ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.




