மேடை ஏறி மைக்கை பிடித்து விட்டால் தங்களுடைய வாழ்கையில் நடந்த சில சுவாரஸ்யமான நிகழ்வுகளை பிரபலங்கள் பகிர்ந்து கொள்வது வழக்கமான ஒன்று.
அந்த வகையில் நடிகர் பாக்யராஜ் தற்போது ஒரு விஷயத்தை பகிர்ந்து கொண்டிருக்கிறார். அவர் கூறியதாவது, சிறு வயதில் நான் ஒரு பெண்ணிற்கு லவ் லெட்டர் கொடுக்க சென்றேன். ஆனால், அப்போது அந்த பெண்ணின் அன்னான் வந்து விட்டதால் லவ் லெட்டரை போட்டுவிட்டு ஓடி வந்து விட்டேன்.
சில நாட்கள் கழித்து அந்த பெண்ணின் அண்ணன் என் அண்ணனை பார்க்க வீட்டிற்கு வந்தார். ஆனால், அன்று நடந்த எந்த விஷயத்தையும் அவர் காட்டிக்கொள்ளவில்லை. இதனால், நான் கொஞ்சம் தைரியமாகிட்டேன்.
என்னுடைய அண்ணன் கடைக்கு சென்று வர சொன்னார். நானும் போனேன். ஆனால், திரும்பி வந்ததும் என்னுடைய கன்னத்தில் பளார் என அரை விழுந்தது.
வீட்டிற்கு வந்த அந்த பெண்ணின் அண்ணன் நான் லெட்டர் கொடுத்த விஷயத்தை கூறாமல், விலைமாதர்கள் வசிக்கும் தெருவின் பக்கம் என்னை அடிக்கடி பார்பதாக கூறி விட்டு சென்று விட்டார். அப்போது தான் தெரிந்தது, நான் அந்த பெண் இருக்கும் தெருவின் பக்கம் கூட வர கூடாது என்பதற்காக வேறு மாதிரியாக போட்டு கொடுத்துள்ளார் என்று. " என கூறினார் பாக்யராஜ்.


