"பாய்ஸ்" படத்தின் மூலம் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானவர் நடிகர் நகுல். பிரபல நடிகை தேவயானியின் தம்பி இவர்.
பாய்ஸ் படத்தை தொடர்ந்து உடல் எடை குறைத்து காதலில் விழுந்தேன், மாசிலாமணி, தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் படங்கள் மூலம் ரசிகர்களை கவர்ந்தார்.
தற்போது டிவி நிகழ்ச்சிகளில் நடுவராக பங்கேற்று வரும் அவர் அடுத்ததாக சூப்பர் சிங்கர் ஜூனியர் நிகழ்ச்சியில் நடுவராகிறார்.
இந்நிலையில் அவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் டிரைவர் கெட்டப்பில் தன் மனைவியுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
இதில் அவர் மனைவிக்காக டிரைவராகிவிட்டேன், சம்பளம் இல்லை, இது அடிமைத்தனம், சாப்பாடு இல்லை, நல்ல உடை இல்லை, மோசமான பாஸ், நம்புங்க என கிண்டலாக பதிவிட்டுள்ளார்.


