நடிகை நயன்தாரா நடித்த கோலமாவு கோகிலா படத்தை இயக்கிய நெல்சன் திலீப்குமார் அடுத்து இயக்கும் படம் "டாக்டர்". நடிகர் சிவகார்த்திகேயன் தயாரித்து, அவரே ஹீரோவாகவும் நடிக்கிறார்.
இசையமைப்பாளர் அனிருத் இசை அமைத்துள்ள இந்த படத்திற்கு விஜய் கார்த்திக் ஒளிப்பதிவு செய்கிறார். இந்தப் படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக நடிப்பவர் புதுமுகம் பிரியங்கா அருள் மோகன்.
இவர் மாடலிங் துறையில் இருந்து சினிமாவுக்கு வந்தவர். கடந்த ஆண்டு கன்னடத்தில் வெளியான "ஒன்ந்த் கத ஹெல்ல" என்ற படத்தின் மூலம் அறிமுகமானார்.
அதன் பிறகு தெலுங்கில் "கேங் லீடர்" என்ற படத்தில் நடிகர் நானி-க்கு ஜோடியாக அறிமுகமானார். அடுத்து "மாயன்" என்ற படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். ஜே.ராஜேஷ் கண்ணன் இயக்கும் இந்தப் படம் இந்த படம் இன்னும் வெளியாகவில்லை.
இந்நிலையில், இவர் இரண்டாவதாக நடித்த தமிழ் படமான "டாக்டர்" படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக நடிக்கிறார். இந்த படம்முதலில் வெளியாகும் என்பதால் தமிழில் இவருக்கு இதுவே அறிமுக படமாக அமைந்துள்ளது.


