"இப்படி இருக்கும் ஆளை தான் கல்யாணம் பண்ணிக்குவேன்" - போட்டு உடைத்த நடிகை ஸ்ருஷ்டி டாங்கே


மேகா என்ற படத்தில் ஹீரோயினாக அறிமுகமானார் நடிகை ஸ்ருஷ்டி டாங்கே. குடும்பப்பாங்கான தோற்றம் அடக்க ஒடுக்க மான நடிப்பு என இளசுகளை கவர்ந்தார்.

ஆனால், அடுத்தடுத்து வந்தபடங்களில் இந்த பொண்ணா..? என்று கேட்கும் அளவுக்கு கவர்ச்சி களம் இறங்கி கிறங்கடித்தார். தமிழ் சினிமாவில் ஒரு ரவுன்ட் வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நடிகைகளில் இவரும் ஒருவர்.

தற்போது, "கட்டில்" என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தின் ப்ரோமோஷன் நிகழ்சிகள் நடந்து கொண்டிருகின்றது. இந்நிலையில், சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய அவர் "கட்டில்" படத்தில் நடித்த போது தமிழ் கலாசாரத்தை பற்றி அறிந்து கொண்டு வியந்து போனாதாக கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், நான் திருமணம் செய்து கொள்ளவிருக்கும் நபர் தமிழ் காலாச்சார முறைப்படி வாழ்பவராக இருக்க வேண்டும். ஒரு தமிழரை திருமணம் செய்து கொள்ள ஆசைப்படுகிறேன் என்று கூறியுள்ளார்.