மறைந்த முன்னாள் முதல்வரின் வாழ்க்கை வரலாற்றைப் படமாக எடுத்துக் கொண்டிருக்கும் இயக்குனருக்கும், கேரளாவைச் சேர்ந்த நடிகைக்கும் இடையே சில ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் நடந்தது.
திருமணமாகி சில ஆண்டுகள் மட்டுமே நீடித்த அவர்களது வாழ்க்கை பின்னர் விவாகரத்தில் முடிந்தது. நடிகை மீண்டும் சினிமாவில் நடிக்க ஆரம்பித்த பிறகுதான் இருவருக்குள்ளும் பிரிவு வந்ததாக நடிகையின் முன்னாள் மாமனார் சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
வீட்டில் நடிக்க கூடாது என ஆர்டர் போட்டுள்ளார்கள் என தெரியும் நடிக்க ஒரு நடிகர் கொடுத்த வாய்ப்புதான் அதற்குக் காரணம் என அவர் கூறியிருக்கிறார். இது, இந்த விவாகரத்து பிரச்னையை மீண்டும் கிளப்பி விட்டுள்ளது.
ஏற்கெனவே இப்படித்தான் அந்த நடிகைக்கும், அந்த நடிகருக்கும் எதோ லிங்க் இருக்கிறது என ஒரு கிசுகிசு வலம் வந்தது. அதற்கு மீண்டும் உயிர் கொடுத்துவிட்டார் முன்னாள் மாமனார்.இதனால், செம்ம கடுப்பில் இருக்கிறாராம் நடிகை.
இயக்குனர் வேறு ஒரு திருமணம் செய்து கொண்டுவிட்ட நிலையில் மாமனார் அதைப் பற்றி பேசி, மகனின் முதல் மனைவியை சீண்டுவது சரியா என சிலர் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.


