நடிகை சனா கான் தமிழில் சிலம்பாட்டம் உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். ஆனால், அவருக்கு எந்த படமும் கை கொடுக்கவில்லை. கொப்பும், கொளையுமாக கொலுக்கு மொழுக்கு என பார்த்தவுடன் கிறங்கடிக்கும் அழகியாக இருந்தாலும் முழுக்க முழுக்க ஹிந்தி பெண் சாயல் இருந்ததால் தமிழ் சினிமாவில் இவருக்கு அங்கீகாரம் கிடைக்க வில்லை.
இதனால், பாலிவுட் பக்கம் கரை சேர்ந்தார் அம்மணி. அங்கே ஏகத்துக்கும் கவர்ச்சியை கட்டவிழ்த்து விட்டு பட வாய்ப்புகளை பெற்று காலத்தை ஒட்டி வந்தார். கால ஓட்டத்தில் நடன இயக்குனர் ஒருவருடன் காதலும்வந்தது. இவர் தான் என்னுடைய காதலன் என பகிரங்கமாக அறிவித்தார்.
ஆனால், கடந்த மாதம் அவரை பற்றிய மிக மோசமான புகார்களை கூறி அவரைபபிரிவதாக கூறினார். அன்று முதல், காதல் தோல்வி குறித்து பல விஷயங்களை பதிவு செய்து வருகிறார் அம்மணி.
இந்நிலையில், அவர் தற்போது வெளியிட்டுள்ள தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நடன இயக்குனரான இவர் தன்னிடம் நடனம் கற்றுக்கொள்ள வந்த சிறு பெண்ணை கற்பமாக்கியுள்ளான். இன்னும் சில பெண்களிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளான்.
மாணவிகளிடம் இருந்து பணம் பெற்று வந்துள்ளார். மாணவர்களிடம் ஆசிரியர் நடந்து கொள்ளும் முறை இது தானா..? அல்லா நிச்சயம் உங்களுக்கு சரியான பாடம் புகட்டுவார்" என்று காதலன்குறித்த பகீர் தகவல்களை வெளியிட்டுள்ளார் சனா கான்.



