நான் இல்லாத போது எப்படி இதனை செய்யலாம் - கணவர் கயல் சந்திரனிடம் VJ அஞ்சனா இடையே வெடித்த சண்டை..! - என்ன ஆச்சு.?


தமிழ் சினிமா நடிகைகள் எப்படி பிரபலமாக உள்ளார்களோ அந்த அளவிற்கு தொலைக்காட்சி தொகுப்பாளினிகளும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக உள்ளனர். அந்த வகையில், தனக்கு என்று ரசிகர்கள் வட்டாரம் வைத்திருப்பவர் VJ அஞ்சனா. 

இவருக்கு சினிமா வாய்புகள் வந்தும் நடிக்க மறுத்துவிட்டார். இந்நிலையில், கயல் திரைப்பட நடிகர் சந்திரன் என்பவரை காதல் திருமணம் செய்துகொண்டு தொலைக்காட்சி பக்கம் வராமல் இருந்தார். 

குழந்தை பிறந்த சில மாதங்களுக்கு பிறகு இப்போது மீண்டும் டிவியில் கலக்கி வருகிறார். மீண்டும் போட்டோ ஷுட் எடுத்து இன்ஸ்டாவில் பதிவு செய்து வைரலாகவே இருப்பார். 

இந்த நிலையில் தான் அவரது ட்விட்டர் கணக்கில், மை ஹஸ்பண்ட் இஸ் மை கண்கண்ட தெய்வம் என்று அவர் ட்வீட் செய்திருந்தார். 

ஆனால், அதை கயல் சந்திரன் தான் பதிவு செய்துள்ளார் போலிருக்கிறது. இந்நிலையில், அந்த ட்வீட்டை ரீ-ட்விட் செய்த அஞ்சனா தனது கணவர் சந்திரனின் பெயரை மென்ஷன் செய்து, எப்படி நான் இல்லாத நேரத்தில் எப்படி என்னுடைய ஃபோனை எடுத்து பயன்படுத்தலாம். 


மவனே எனக்கு சந்தர்பம் கிடைக்கும் போது நான் இத உனக்கு திரும்ப பண்ணுவேன் என்று ட்வீட் செய்துள்ளார்.இதை பார்த்த ரசிகர்கள் இந்த உரையாடலை வைத்து கயல் சந்திரனை கலாய்த்து வருகிறார்கள்.