"வலிமை" படத்தின் ஹீரோயின் இவர் தான் - அதிகாரப்பூர்வமாக அறிவித்த பிரபலம்..!


தல அஜித் நடிப்பில் எச் வினோத் இயக்கத்தில் பரபரப்பாக உருவாகி வரும் திரைப்படம் வலிமை. இரண்டு கட்ட படப்பிடிப்புகள் முடிவடைந்து தற்போது மூன்றாம் கட்ட படப்பிடிப்புகள் சென்னையில் நடைபெற்று வருகின்றன.

தல அஜித் நீண்ட நாட்களுக்கு பிறகு போலீஸ் அதிகாரியாக நடிக்க உள்ளார். ஹாலிவுட் தரத்தில் உருவாகும் இந்த படத்தில் ஆக்ஷன் காட்சிகள் பெரிதும் பேசப்படும் என படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் சமீபத்தில் கூறினார்.

தற்போது சென்னையில் பைக் சேசிங் சண்டைக்காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது. இதில் தல அஜித் டூப் போடாமல் நடித்து வருவதாகவும் செய்திகள் பரவ ஆரம்பித்தது. இந்நிலையில் வலிமை படத்தின் படப்பிடிப்பில் இருந்து படப்பிடிப்புக் காட்சிகள் வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சியில் உள்ளாக்கியது.


இந்நிலையில், இந்த படத்தின் ஹீரோயின் யார் என்றே இதுவரை தெரியாமல் இருந்தது. இந்நிலையில், இந்த படத்தில் காலா படத்தில் ரஜினியில் இள வயது காதலியாக நடித்த பிரபல பாலிவுட் பட நடிகை ஹுமா குரேஷி நடிக்கவுள்ளார் என்ன பிக்பாஸ் அபிராமி அறிவித்துள்ளார்.