"கேவலமா இருக்கு.. கன்றாவி.." - நயன்தாரா வெளியிட்ட வீடியோ - கலாய்க்கும் நெட்டிசன்கள்..!


உலகமே கொரோனாவின் பாதிப்பிற்கு உள்ளாகி இந்த நிலைமையை சரிசெய்து கொள்ள போராடி வருகிறது. கிட்ட தட்ட உலகமே முடங்கி விட்டது என்று தான் கூற வேண்டும். 

உலக நாடுகளில் பாதிக்கப்பட்டவர்கள் குணமானவர் சதவிகிதிம் 10-க்கும் குறைவாக உள்ள நிலையில், சீனாவில் மட்டும் எப்படி 90சதவிகிதம் மக்கள் குணமானார்கள் என்ற கேள்வியும் அது சுற்றிய பல சந்தேகங்களும் காற்றில் பறந்து கொண்டிருகின்றது. 

இந்தியாவில் இதுவரை ஆயிரம் பேருக்கு மட்டுமே கொரோனா தாக்கம் உள்ளது. ஒரு வேளை இந்த எண்ணிக்கை லட்சத்தில் சென்றால் இந்தியா ஆட்டம் கண்டு விடும் என்ற அச்சத்தில் 21 நாள் ஊரடங்கை அமல் படுத்தியுள்ளது இந்திய அரசு. 

மேலும், தனிமைப்படுத்துதல் வேண்டும் என மத்திய அர, மாநில அரசு என கெஞ்சியும், அறிக்கை வெளியிட்டும் கேட்டுக் கொண்டுள்ள நிலையில் இந்தியா முழுக்க ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்படுகிறது. 

இந்தியா முழுவதும் சினிமா முதல் சின்னத்திரை படப்பிடிப்புகள் வரை அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்நிலையால் பிரபலங்கள் அனைவரும் வீட்டில் இருக்கிறார்கள். 

பொதுவாக கிடைக்கும் ஒய்வு நேரங்களில் வெளிநாடு பறக்கும் பிரபலங்கள் இப்போது வெளிநாடா என்று அலறியடித்து ஓடுகிறார்கள். பெரும்பாலும் வீட்டிற்குள் முடங்கியவர்களில் விக்னேஷ் சிவன் நயன்தாராவும் அடங்குவர். அடிக்கடி பாரீஸ் லண்டன் என காதல் வானில் சிறகடித்து பறக்கும் ஜோடி சென்னையில் வீட்டிற்குள் முடங்கியுள்ளது.


இதனை தொடர்ந்துஇருவரும் சேர்ந்து எடுத்துக்கொண்ட டிக் டாக் வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.இதனை பார்த்த ரசிகர்கள் கன்றாவியா இது.. சக்கரை பொங்கல் மேல மீன் குழம்பு மாதிரி என கலாய் கருத்துக்களை வெளியிட்டு வருகிறார்கள்.
"கேவலமா இருக்கு.. கன்றாவி.." - நயன்தாரா வெளியிட்ட வீடியோ - கலாய்க்கும் நெட்டிசன்கள்..! "கேவலமா இருக்கு.. கன்றாவி.." - நயன்தாரா வெளியிட்ட வீடியோ - கலாய்க்கும் நெட்டிசன்கள்..! Reviewed by Tamizhakam on March 29, 2020 Rating: 5
Powered by Blogger.