பிரபல தனியார் தொலைக்காட்சி ஒன்றில் நிகழ்ச்சிகளில் காமெடி செய்து வந்தவர் லோகேஷ். அதே நிகழ்ச்சியில் இவருடன் இணைந்து பணிபுரிந்து வந்தவர் இவருடைய நண்பர் குட்டி கோபி.
சமீபத்தில் இவருக்கு திடீரென பக்கவாதம் ஏற்பட்டு இடது கால் மற்றும் இடது கை செயலிழந்துள்ளது. இதனை தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு சிகிச்சையளிக்க ரூ 7 லட்சம் வரை பணம் தேவைப்படுகிறது என்று தெரியவந்தது.
இந்நிலையில் இவரது தற்போதைய நிலையை குறித்து இவரது நண்பர் குட்டி கோபி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இதில் லோகேஷின் மருத்துவத்திற்கு நாங்கள் கேட்ட தொகை வந்துவிட்டது என்றும் லோகேஷுக்கும் நல்ல படியாக அறிவை சிகிச்சை நடந்து முடிந்துவிட்டது.
நாளை அவரை ஜெனரல் வார்டிற்கு மாற்ற உள்ளனர். இனி, உதவி கேட்டு பகிர்ந்த லோகேஷின் அந்த புகைப்படத்தை யாரும் சமூக வலைத்தளங்களில் பரப்ப வேண்டாம் என்று கூறியுள்ளார்.



