ஜாக்கெட்-ல ஜன்னல் தானே வப்பாங்க..? நீங்க என்ன கதவு வச்சி இருக்கீங்க..? -இளம் நடிகை வெளியிட்ட புகைப்படம் - கலாய்க்கும் நெட்டிசன்கள்


பட வாய்ப்பிற்காக நாளுக்கு நாள் ஆள் மாறிவரும் ஷாலு ஷம்மு, பிக்பாஸ் மீராமிதுனுக்கே டப் கொடுக்கும் அளவிற்கு மாறியுள்ளார். 

அரைகுறை ஆடையில் ஆண் நண்பர்களுடன் கவர்ச்சி குத்தாட்டம், ஹாட் போட்டோ ஷூட் என அனைத்தையும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வருகிறார். பட வாய்ப்பிற்காக ஷாலு ஷம்மு செய்யும் வேலைகள் நெட்டிசன்களை செம கடுப்பாக்கியுள்ளது. 

சிவகார்த்திகேயன் நடிப்பில் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்த திரைப்படம் "வருத்தப்படாத வாலிபர் சங்கம்". அந்த படத்தில் சிவகார்த்திகேயன், சூரி காமெடி கூட்டணி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. அதில் சூரிக்கு ஜோடியாக ஷாலு ஷம்மு நடித்திருந்தார். 

அதன் பிறகு தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும், சகலகலா வல்லவன் உள்ளிட்ட படங்களில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்தார். தொடர்ந்து சினிமாவில் துணை நடிகையாக நடித்து வரும் ஷாலு ஷம்மு, சமீப காலமாக சோசியல் மீடியாவில் தனது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில், தற்போது தன்னுடைய முதுகு முழுதும் தெரிவது போன்ற ஒரு டாப்-ஐ அணிந்து கொண்டு புகைப்படங்கள் சிலவற்றை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த நெட்டிசன்கள், எல்லோரும் ஜாக்கெட்ல ஜன்னல் தானே வைப்பார்கள். நீங்க என்ன கதவு வைத்துள்ளீர்கள் என கலாய் கருத்துக்களை வெளியிட்டு வருகிறார்கள்.