Tamanna Bhatia

பாத்து... பாத்து... மூச்சு வாங்க போகுது.. - வைரலாகும் தமன்னா வீடியோ - நெட்டிசன்கள் கலாய்..!


தமிழில் கேடி திரைப்படம் மூலம் அறிமுகமானவர் தமன்னா. பாலாஜி சக்திவேல் இயக்கிய ’கல்லூரி’ படம் மூலம் தமிழக ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். 

அதன் பின்னர் தெலுங்கு, கன்னடம் என பல்வேறு படங்களில் பிசியாக நடித்து வந்தார். சமீபத்தில், சுந்தர் சி இயக்கத்தில் விஷாலுக்கு ஜோடியாக ’ஆக்‌ஷன்’ படத்தில் நடித்தார். 

இந்த படத்தில் பல மாஸ் சண்டை காட்சிகளில் தமன்னா நடித்திருந்தார். இதன் மூலம் கிளாமர் ஹீரோயினில் இருந்து ஆக்‌ஷன் ஹீரோயினாக அவதாரம் எடுத்தார்தமன்னா.ஆனால், இந்த படத்தில் கவர்ச்சிக்கும் குறை வைக்கவில்லை அம்மணி.

முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு கவர்ச்சி காட்டி இளசுகளை கிறங்கடித்தார் அம்மணி. இந்நிலையில், கொரோனா காரணமாக வீட்டில் முடங்கியுள்ள இவர் வீட்டில் இருந்த படி யோகா செய்யும் வீடியோவை வெளியிட்டு வருகிறார்.

பொதுவாக யோகா என்றால் பொறுமையாகவும், நிதானமாகவும் தான் செய்வார்கள். ஆனால், தமன்னா பொறுமையாக செய்தாலும், வேக வேகமாக செய்வது போல அந்த வீடியோவை வெளியிட்டுள்ளார். 

இதனை பார்த்த ரசிகர்கள் பாத்து... பாத்து... மூச்சு வாங்க போகுது இதையெல்லாம் இவ்வளவு ஸ்பீடா செய்ய கூடாது என்று கலாய் கருத்துக்களை கமெண்டி வருகிறார்கள்.