நொந்துபோன நடிகர் மாதவன் - தயவு செஞ்சு அதை மட்டும் நீக்கிடுங்க - கடுப்பில் வெளியிட்ட பதிவு..!


உலக மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ள ஒரு விஷயம் கொரோனா வைரஸ் தாக்கம் தான். இந்த வைரஸ் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. இந்தியாவில் இதுவரை 57 பேர் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் ஒரே ஒருவர் மட்டும் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டு அரசு மருத்துவமனையில் தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளார். அவர் வெளிநாட்டான ஓமன் நாட்டிலிருந்து வந்தவர் ஆவர்.

இந்தவைரஸ் குறித்த விழிப்புணர்வு மற்றும் தடுப்புமுறை குறித்த தகவல்கள் பேஸ்புக், வாட்சப், ட்விட்டர், தொலைக்காட்சி, செய்திதாள்கள் என அனைத்து வகையான ஊடகங்களிலும் வெளியிடப்பட்டு வருகின்றன.

அந்த வகையில், தொலைபேசியில் யாரையாவது அழைத்தால் காலர் ட்யூனாக கொரோனா விழிப்புணர்வு வாசகம் ஒலிபரப்பு செய்யப்பட்டு வருகின்றது. இதனை அனைத்து தொலைத்தொடர்பு சேவை வழங்கும்நிறுவனங்களும் பின்பற்றி வருகின்றன.

ஒருவர் இருமுவது போல தொடங்கும் இந்த ஆடியோ பதிவை அடிக்கடி தொலைபேசியில் பலரையும் அழைத்து பேசுபவர்களுக்கு நிச்சயம் ஒரு வித வெறுப்பை உண்டாக்கும். அந்த  வெறுப்பு நடிகர் மாதவனுக்கும் வந்துள்ளது.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், இந்திய சுகாதார துறை மக்கள் மீது அக்கறை எடுத்து இந்த விஷயங்களைசெய்வதை பாராட்டுகிறேன். ஆனால், தொடக்கத்தில் இருமுல் ஒலியை மட்டும் நீக்கிவிடுங்கள். நான் தொடர்பு கொள்ளும் அனைவரும் நலமுடம் பேச வேண்டும் என்று எதிர்பார்கிறேன் என கூறியுள்ளார்.