வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் ஆஷ்னா சவேரி. ஸ்ரீநாத் இயக்கிய இந்த படத்தில் சந்தானம் நாயகனாக நடித்திருந்தார்.
காமெடியனாக நடித்துவந்த சந்தானம் முதன்முதலாக இந்த படத்தில் தான் ஹீரோவாக அறிமுகமானார். சித்தார்த் விபின் இசையமைத்த இப்படம் ஓரளவிற்கு வரவேற்பை பெற்றது.
அதனை தொடர்ந்து சந்தானம் ஜோடியாக இனிமே இப்படத்தான் படத்தில் நடித்தார். சமீபத்தில் இவர் நடித்த நாகேஷ் திரையரங்கம் திரைப்படம் வெளியானது.
இந்நிலையில், நடிகர் விமலுடன் இவர் நடித்த இவனுக்கு எங்கயோ மச்சம் இருக்கு என்ற படத்தில் கவர்ச்சி காட்டேரியாக வலம் வந்தார் அம்மணி.
அதுவரை படங்களில் குடும்ப பங்காக நடித்த ஆஷ்னா சவேரியின் கவர்ச்சி தாண்டவம் ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.
தன்னுடைய உடலை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்வதில் அதீத ஆர்வம் காட்டும் அம்மணி தினசரி உடற்பயிற்சி செய்து வருகிறார்.
அப்போது எடுக்கப்பட்ட சில புகைப்படங்களை இணையம் வழியாக ரசிகர்களுடன் பகிர்ந்து கொண்டிருக்கிறார்.





