பிரபல தொலைக்காட்சி தொகுப்பாளரும், நடிகையுமான பூஜா ராமச்சந்திரன், ஏற்கனவே ஒரு நடிகைக்கு 2வது கணவராக இருந்த ஜான் கொக்கனை 2வது திருமணம் செய்துள்ளார்.
பிரபல தெலுங்கு தொலைக்காட்சி ஒன்றில் தொகுப்பாளினியாக பணிபுரிந்து வந்த பூஜா ராமச்சந்திரன், அவருடன் பணியாற்றிய கிரேக் கல்லியாட் என்பவரை காதலித்து திருமணம் செய்தார்.
அதன்பின் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு 2017ம் ஆண்டு இருவரும் பிரிந்தனர். அதன் பின் தனியாக வாழ்ந்து வந்த பூஜா ராமச்சந்திரன் தமிழ்,மலையாளம், தெலுங்கு ஆகிய மொழிப்படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்து வந்தார்.
தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு ரசிகர்களிடையே பிரபலமானார். தற்போது அவர் ஜான் கொக்கன் என்பவரை 2வது திருமணம் செய்துள்ளார்.
இந்நிலையில், தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பிகினி உடையில் இருக்கும் படு சூடான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்துள்ளார்.


