இவன் தந்திரன் படத்தின் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமான ஷ்ரத்தா ஸ்ரீநாத்துக்கு விக்ரம் வேதா வெற்றிப்படமாக அமைந்தது. மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி திரையுலகிலும் ஷ்ரத்தா பரபரப்பாக இயங்கிவருகிறார்.
அஜித் நடிக்கும் நேர்கொண்ட பார்வை படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடித்திருந்தார். விஜய்சேதுபதி, மாதவன் நடிப்பில் 2017ல் வெளியாகி சூப்பர் ஹிட் வெற்றியைப் பெற்றி ‘விக்ரம் வேதா’ படத்தில் மாதவனுக்கு மனைவியாக நடித்திருந்தார்.
இந்த படத்தின் மூலம்தான் ரசிகர்கள் கண்ணில் பட ஆரம்பித்தார் என்றே சொல்லலாம். தொடர்ந்து பல படங்களில் நடித்து வரும் இவர் சமூக வலைதளங்களில் பிஸியான ஒரு நடிகை.
அவ்வப்போது, கவர்ச்சி போட்டோ ஷூட்களை நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்ப்பார். தற்போது, லாக்டவுன் காரணமாக பல நடிகைகள் தங்களுடைய பழைய புகைப்படங்களை தோண்டி எடுத்து ரசிகர்களுடன் பகிர்ந்து வருகிறார்கள்.
அந்த வரிசையில், நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத்தும் தன்னுடைய 20-வது வயதில் பொசு பொசுவென இருக்கும் போது எடுத்துக்கொண்ட ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
Tags
Shraddha Srinath