சமீப காலமாக நடிகைகள் பலரும் பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைக்கப்படுவதாக Me Too ஆன்லைன் இயக்கம் மூலம் புகார் சொல்லி பரபரப்பை ஏற்படுத்தினர். தமிழ், தெலுங்கு, இந்தி நடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் இந்த குற்றச்சாட்டில் சிக்கினர்.
தற்போது இன்னொரு நடிகையும் புகார் கூறியுள்ளார். அவரது பெயர் மான்வி கக்ரூ. இவர் No One Killed Jessica மற்றும் P.K உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார்.
மேலும், தொலைக்காட்சி தொடர்கள், வெப் தொடர்களிலும் நடித்து வருகிறார். மான்வி கக்ரூ அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது, என்னை போனில் ஒருவர் அழைத்து, தன்னை இயக்குனர் என்று அறிமுகப்படுத்திக்கொண்டார்.
ஒரு வெப் சீரிஸ் எடுக்கிறோம், அதில் நீங்கள் நடிக்க வேண்டும் என்று கூறினார். முதலில் கதையை சொல்லுங்கள், எனக்கு பிடித்து இருந்தால் சம்பளம் உள்ளிட்ட மற்ற விஷயங்கள் குறித்து பேசலாம் என்றேன்.
அவர் எனது சம்பளத்தை கூறினார். அது குறைவாக இருக்கிறது என்றேன். உடனே சம்பளத்தை மூன்று மடங்கு உயர்த்தி இந்த சம்பளம் ஒகேவா என்றார். ஒரேயடியாக இவ்வளவு சம்பளத்தை உயர்த்தி இருக்கிறாரே என்று வியந்தேன்.
அதன்பிறகு, இவ்வளவு சம்பளம் என்னால் கொடுக்க முடியும். ஆனால், அதற்கு பதிலாக நீங்கள் அதற்கு உடன்பட வேண்டும் என்றார். இதனால் கோபமாகி அவரை திட்டினேன். இப்படி பேச உங்களுக்கு எவ்வளவு துணிச்சல்? போலீசில் புகார் செய்வேன் என்று கோபமாக பேசிவிட்டு போனை வைத்து விட்டேன்.” இவ்வாறு அவர் கூறியுள்ளார். இந்த குற்றச்சாட்டு இந்தி பட உலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
வழக்கம் போல யார் அந்த இயக்குனர், அவர் பெயர் என்ன என்று இவரும் சொல்லவே இல்லை. இப்படியான நடிகைகள் நிஜமாகவே இது போன்ற தும்புருத்தலுக்கு உள்ளாக்கப்படுகிறார்களா..? அல்லது விளம்பரம் மற்றும் மீடியாவில் பெயர் வரவேண்டும் என்பதற்காக இவர்களே ஏதாவது கிளப்பி விடுகிறார்களா..? என்பது தான் சிதம்பர ரகசியமாக உள்ளது.