பிரபல நடன இயகுனருடன் கடற்கரையில் ரொமான்ஸ் பாடலுக்கு ஆட்டம் போட்ட நீலிமா ராணி - வைரலாகும் வீடியோ..!


குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, சினிமாவில் குணச்சித்திர நடிகை, சீரியல்களில் முக்கிய கதாபாத்திரங்கள் என தொடர்ச்சியாக நடிப்பில் கலக்கி வரும் நீலிமா ராணியின் சமீபத்திய அவதாரம் தயாரிப்பாளர். 

“வாணி ராணி, தாமரை, தலையணை பூக்கள்” ஆகிய சீரியல்களில் நடித்துக்கொண்டே “ஜீ தமிழ்” தொலைக்காட்சியில் “நிறம் மாறாத பூக்கள்” சீரியலை நீலிமா ராணி தனது இசை பிக்சர்ஸ் மூலமாகத் தயாரித்து வருகிறார். 

தமிழ் சினிமாவில் “தேவர்மகன்” என்ற படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் நடிகை நீலிமா ராணி. இதனை தொடர்ந்து அவர் “விரும்புகிறேன், தம், மொழி ராஜாதிராஜா, சந்தோஷ் சுப்பிரமணியம், நான் மகான் அல்ல” போன்ற பல படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

வில்லி கதாபாத்திரங்களில் சதா முறைத்து கொண்டு பார்க்கவே பயமுறுத்தும் முகபாவனைகளுடன் இவரை பார்த்து பழகி விட்ட நிலையில், நாயகிகளுக்கு இணையாகநடன இயக்குனர் சதீஷுடன் ரொமான்ஸ் பாடலுக்கு நடனமாடியுள்ள வீடியோ ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது. 

--- Advertisement ---

 

Health Insurance, How to buy insurance online

ஹெல்த் இன்சுரன்ஸ்: வகைகள், தேர்வு செய்யும் முறை, மற்றும் ஏமாறாமல் இருக்க வழிகள்