"அவன் எனக்கு தான்டி..! இல்ல, எனக்கு தான்..!.." - திரைமறைவில் நடக்கும் இளம் நடிகைகளின் குடுமிபிடி சண்டை..! - அட தொயரத்த..!


ஊருக்கு ஒதுக்கு புறமாக ஓடும் ரகத்திலான ஒரு படத்தில் ஹீரோவாக தமிழ் சினிமாவில் அறிமுகமானாலும் அதன்பிறகு தட்டுத்தடுமாறி தனது அழகால் இளம் பெண்களை கவர்ந்து வைத்துக்கொண்டு சமீபகாலமாக ஹிட் படங்களையும் கொடுத்து வருகிறார் அந்த இளம் நடிகர். 

பெரிய்ய முதலாளி நிகழ்ச்சி இவருக்கு நல்ல அறிமுகத்தை கொடுத்தது என்று சொல்லலாம். அந்த பெரிய்ய முதலாளி வீட்டிலேயே இருந்த ஒரு அரிசியா நடிகையுடன் இவருக்கு ஏற்பட்ட கெமிஸ்ட்ரி எரிந்து ஒரு படத்தில் பயாலஜியாகவும் மாறியது. 

இதனை தொடர்ந்து, ரெண்டு பேருக்கும் ஜோடிப்பொருத்தம் நல்லா இருக்கிறது என்று பலரும் கிளப்பி விட்டனர். இருவரும் படத்தில் பண்ணிய சேட்டைகள் கொஞ்ச நஞ்சமில்லை. தியேட்டருக்கு சென்றவர்கள் எல்லாம் உக்காந்த இடத்தில் நெழிந்து கொண்டு தான் இருந்தார்கள் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். 

அந்த படம் ஒரு பெரிய ஒப்பனிங்கை பெறவில்லை என்றாலு சொல்லிக்கொள்ளும் படி ஹிட்டாகி விட்டது. அதனை தொடர்ந்து டாப் நடிகர் நடித்த படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றவர் அந்த நம்பிக்கையான நடிகை. அவரும் இந்த இளம் நடிகரும் நடித்த சமீபத்தில் வெளிவந்த படம் ஒன்று சுமாரான வெற்றியைப் பெற்றது. 

அந்த படத்தில் நடிக்கும் போதே அந்த நடிகைக்கு இந்த இளம் நடிகரின் மேல் ஒரு பார்வை விழுந்து விட்டதாம். எப்படியாவது நடிகரை கவுத்துவிட வேண்டும் என தினமும் போன் செய்வதும் பார்ட்டிக்கு அழைத்துச் செல்வது என தன்னுடைய பங்கிற்கு ஹீரோவை வசீகரிக்க முயற்சி செய்கிறாராம். 

இதனை அறிந்த இன்னொரு நாயகி, அந்த இளம் நடிகரும் நானும் காதலிக்கிறோம் என்றும் விரைவில் திருமணம் செய்து கொள்ளப் போகிறோம் எனவும் ரசிகர்கள் மத்தியில் போட்டு உடைத்தார். விளையாட்டுப் போக்கில் சொல்லி இருந்தாலும் ஒரு இக்கு வைத்துதான் சொல்லி இருக்கிறார் அந்த நாயகி. 

இதனை அறிந்த அந்த இளம் நடிகர் இரண்டில் எந்த ஒன்றை தொடர்வது என பலத்த யோசனையில் உள்ளாராம். யோசிக்கும்போதே தட்டித் தூக்கிவிட வேண்டும் என இரண்டு நாயகிகளும் அடித்துக் கொள்வதால் தமிழ் சினிமாவில் யாருக்கும் தெரியாமலேயே ஒரு பனிப்போர் நடந்து வருகிறதாம். 

இருந்தாலும் அந்த இளம் நடிகருக்கு ஓவர் ரொமான்ஸ் செய்த நாயகியின் மீது தான் ஒரு ஈடுபாடு இருக்கிறது. இப்போதுதான் அந்த இளம் நடிகரின் படங்கள் ஓரளவு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெற்று கவனிக்கப்படும் நாயகனாக மாறி வருகிறார். 

நிலைமை இப்படி இருக்கும் போது தன் தலையில் தானே மண்ணை வாரிபபோட்டுக்கொள்ள வேண்டுமா..? என்று யோசித்து வருகிறாராம் நடிகர். ஆனால், எப்படியும் இன்னும் ரெண்டு வருசத்துல கல்யாணம் பண்ணிக்க போறோம் என்ன பண்ணலாம் என தீவிர யோசனையில் இருக்கிறாராம் நடிகர்.

"அவன் எனக்கு தான்டி..! இல்ல, எனக்கு தான்..!.." - திரைமறைவில் நடக்கும் இளம் நடிகைகளின் குடுமிபிடி சண்டை..! - அட தொயரத்த..! "அவன் எனக்கு தான்டி..! இல்ல, எனக்கு தான்..!.." - திரைமறைவில் நடக்கும் இளம் நடிகைகளின் குடுமிபிடி சண்டை..! - அட தொயரத்த..! Reviewed by Tamizhakam on April 19, 2020 Rating: 5
Powered by Blogger.