அக்கட தேசத்தை சேர்ந்த பொசு பொசு என நாட்டுக்கடையாக இருக்கும் அழகிய நடிகை தமிழ் சினிமாவில் கொடி நாட்ட போகிறேன் என்று வந்தார். அடுத்தடுத்து பட வாய்ப்புகள் கிடைக்க ஏக குஷியில் இருக்கும் அந்த நடிகையை ஹேக்கர்கள் சீண்டி உள்ளார்களாம்.
அந்த நடிகையின் முகநூல் மற்றும் இன்ஸ்டாகிராம் கணக்கை அலேக்காக ஹேக் செய்து மார்பிங் செய்யப்பட்ட மோசமான புகைப்படங்களை பதிவேற்றி சேட்டை செய்துள்ளார்கள்.
இதனால், கோபத்தின் உச்சிக்கு சென்ற அம்மணி இது மார்பிங் செய்யப்பட்ட புகைப்படம், இது ஒரிஜினல் புகைப்படம் என சில புகைப்படங்களை ஒப்பிட்டு ரசிகர்களுக்கு விளக்கம் கொடுத்தார்.
நான் கவர்ச்சியாக போஸ் கொடுப்பதே கிடையாது. ஆனால், எனது புகைப்படத்தை இப்படி மார்பிங் செய்துள்ளீர்களே உங்களுக்கு அறிவு இல்லையா? உங்களுக்கு சகோதரியும், அம்மாவும் இல்லையா? என கடுமையாக திட்டி தீர்த்து விட்டாராம்.
அடுத்தகட்டமாக இந்த விவகாரத்தை சைபர் கிரைம் பக்கம் எடுத்து சென்றுள்ளாராம் அந்த நடிகை. இதனை கேட்ட ரசிகர்கள், இதுக்கெல்லாம் முக்கியத்துவம் கொடுக்காதீர்கள். உங்கள் வேலையை நீங்கள் சிறப்பாக செய்யுங்கள். இதற்கெல்லாம் கவலைப்பட வேண்டிய அவசியமே இல்லை என்று ஆறுதல்கூறி வருகிறார்கள்.