ஆடையின்றி இருக்கும் புகைப்படத்தை அனுப்பிய மர்ம நபர்கள் - பனிமலர் கொடுத்த பதிலை பாருங்க..!


பொதுவாக சமூக வலைத்தளங்களில் இருக்கும் பெரும்பாலானோர் ஆரோக்கியமான விவாதம் நடத்தாமல் அருவருப்பான வார்த்தைகள், புகைப்படங்கள், கமெண்ட்டுக்களை பதிவு செய்து வருகிறார்கள்.

இந்த நிலையில், பெண் பத்திரிகையாளரும், பெரியாரியவாதியுமான பனிமலர் என்பவருக்கு சில மர்ம நபர்கள் ஆண்கள் ஆடை இன்றி இருக்கும் படங்களை அனுப்பியுள்ளதால் அவர்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பனிமலர் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். 

அதில் அவர் கூறியிருப்பதாவது, ஆண்கள் ஆடையின்றி இருக்கும் படங்களை எனக்கு அனுப்புவதன் உளவியலை என்னால் புரிந்து கொள்ளவே முடியவில்லை. 

அதைப் பார்த்து மயங்கி உங்களிடம் பெண்கள் பேசுவார்கள் என நம்புகிறீர்கள் எனில் சாரி பிரதர்ஸ், எங்களுக்கு அருவருப்பைத் தவிர வேறொன்றும் ஏற்படப்போவதில்லை இயல்பிலேயே ஆண்களின் உடல் பார்த்து மயக்கம் ஏற்படும்படி பெண்கள் உருவாக்கப்படவில்லை என படித்திருக்கிறேன் அதற்கு, விதிவிலக்குகள் இருக்கலாம். 

ஆனால், உங்கள் உறுப்பு ஆண்மை இல்லை என்ற தெளிவு எங்களிடம் இருக்கிறது. அதைத்தாண்டி, தன்னுடைய செயல்களால் பேராண்மை மிக்க ஆண்கள் பலரை தினமும் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம். அதில் எல்லோரிடமுமே நாங்கள் காதல் கொள்வதோ, கலவி கொள்வதோ இல்லை, அப்படி இருக்க நீங்கள் லிஸ்டிலேயே இல்லை. 

ஒழுக்கமும், நற்செயல்கள் மட்டுமே ஒருவரை ஈர்க்கும், அநாகரிகம் ஒருபோதும் ஈர்க்காது என்று பதிவு செய்துள்ளார். வழக்கம்போல் இந்த பதிவுக்கும் ஆதரவு மற்றும் எதிர்ப்பு கமெண்ட்டுக்கள் பதிவாகி வருகிறது.

ஒரு மேடையில் தந்தை பெரியார் இப்போது இருந்தால் நான் அவரை திருமணம் செய்து கொள்வேன் என்று கூறியவர் இந்த பனிமலர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆடையின்றி இருக்கும் புகைப்படத்தை அனுப்பிய மர்ம நபர்கள் - பனிமலர் கொடுத்த பதிலை பாருங்க..! ஆடையின்றி இருக்கும் புகைப்படத்தை அனுப்பிய மர்ம நபர்கள் - பனிமலர் கொடுத்த பதிலை பாருங்க..! Reviewed by Tamizhakam on April 23, 2020 Rating: 5
Powered by Blogger.