மலையாள படத்தின் மூலம் அறிமுகமான ரம்யா நம்பீசன் நடிக்க தொடங்கி நீண்ட இடைவேளைக்கு பின் தமிழில் ஒரு நாள் கனவு படத்தில் ஒரு துணை கதாபாத்திரத்தில் அறிமுகம் ஆனார்.
தொடர்ந்து இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் பீட்சா திரைப்படத்தில் நடித்த இவருக்கு அந்த படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் வெற்றி படமாக அமைந்தது.
தொடர்ந்து இவர் நடித்த நாலு போலீசும் நல்லா இருந்த ஊரும் மற்றும் டமால் டுபீல் படங்கள் தோல்வி படங்களாக அமைந்தாலும் அடுத்து வெளியான சேதுபதி மற்றும் சைத்தான் படங்கள் ஓரளவு வெற்றி படங்களாக அமைந்ததால் தற்போது ராமயா நம்பீசன் தமிழிலில் குறிப்பிடத்தக்க நடிகைகளில் ஒருவராக வலம் வருகிறார்.
தமிழில் கதாநாயகியாக கடைசியாக சிபிராஜுடன் சத்யா படத்தில் நடித்தார். இந்த படமும் இவருக்கு வெற்றி படமாக அமைந்தது. படங்களில் எப்போதும் ஹோம்ளியாகவே நடிப்பார் ரம்யா நம்பீசன்.
சமூகவலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர் அவ்வப்போது தன்னுடைய புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கண்களுக்கு விருந்து வைத்து வருகிறார். அந்த வகையில், தற்போது பிங்க் நிற உடையில் க்யூடான ரியாக்ஷன் கொடுத்த படி சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் அம்மணி.