அட..! தனுஷின் "ஆடுகளம்" படத்தில் முதலில் நடித்தது இவரா..? - வைரலாகும் புகைப்படங்கள் - சுவாரஸ்யமான தகவல்..!


நடிகர் தனுஷ் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்பவர். ஆரம்பத்தில், துக்கடா , பக்கடா என படங்களில் நடித்து வந்தவர் இப்போது ஆளே மாறி விட்டார். ஒரே மாதிரியான கதை களங்களில் நடிப்பதை தவிர்த்து விடுகிறார். 

வித்தியாசமான கதைக்களம், வித்தியாசமான கெட்டப் என ஒரு கலக்கு கலக்குகிறார். கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் இவர் நடிப்பில் உருவாகியுள்ள ஜகமே தந்திரம் திரைப்படம் மே மாதம் வெளியாக தயாராக இருந்த நிலையில், கொரோனா வைரஸ் காரணமாக தள்ளி வைக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது. 

தற்போது, இவர் இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் கர்ணன் திரைப்படத்தில் நடித்து வருகிறார். மேலும் தனுஷ் பணியாற்றிய இயக்குனர்களில் மிகவும் முக்கியமான இயக்குனர் வெற்றிமாறன். 

இவர்கள் கூட்டணியில் இதுவரை வெளியான 4 படங்களான பொல்லாதவன், ஆடுகளம், வடசென்னை மற்றும் அசுரன் உள்ளிட்ட திரைப்படங்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. 


இதனிடையே இவர்கள் கூட்டணியில் கடந்த 2011-ம் ஆண்டு வெளியான ஆடுகளம் திரைப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மிகப்பெரிய வெற்றி அடைந்தது. 


இந்த படத்தில் தனுஷிற்கு ஜோடியாக நடிகை "டாப்ஸி பண்ணு" நடித்திருப்பார், ஆனால், டாப்ஸி நடித்த அந்த ஆங்கிலோ இண்டியன் கதாபாத்திரத்தில் நடிகை திரிஷா தான் முதலில் நடித்தாராம். சில பிரச்சனைகள் காரணமாக திரிஷா அந்த படத்தில் இருந்து விலகவே நடிகை டாப்ஸிக்கு அந்த வாய்ப்பு போயுள்ளது.


ஆடுகளம் படப்பிடிப்பில் நடிகர் தனுஷ் உடன் திரிஷா இருக்கும் சில புகைப்படங்கள் தற்போது இணைதளத்தில் பரவி வருகிறது.

அட..! தனுஷின் "ஆடுகளம்" படத்தில் முதலில் நடித்தது இவரா..? - வைரலாகும் புகைப்படங்கள் - சுவாரஸ்யமான தகவல்..! அட..! தனுஷின் "ஆடுகளம்" படத்தில் முதலில் நடித்தது இவரா..? - வைரலாகும் புகைப்படங்கள் - சுவாரஸ்யமான தகவல்..! Reviewed by Tamizhakam on April 03, 2020 Rating: 5
Powered by Blogger.