பிரபல நடிகைக்கு ரம்யா கிருஷ்ணன் கொடுத்த நச் முத்தம் - வைரலாகும் புகைப்படம்..!


நடிகை ரம்யா கிருஷ்ணன் இள வயதில் இளசுகளை கிறங்கடித்து பிறகு சினிமாவை விட்டு சற்றே ஒதுங்கி இருந்தார். அதன் பிறகு, படையப்பா படத்தின் மூலம் தன் செகண்ட் இன்னிங்ஸை தொடங்கியவர் தான், அதனை தொடர்ந்து பல படங்களில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். 

அதிலும் பாகுபலி படத்தில் இவர் நடித்த ராஜமாதா கதாப்பாத்திரம் பலராலும் கொண்டாடப்பட்டது. இந்நிலையில் ரம்யா கிருஷ்ணன் சமீபத்தில் நடிகை சார்மியிடம் வீடியோ கால் பேசியுள்ளார். 

உங்களுடன் பேசுவது சந்தோஷம் என கூறி சார்மி, அதோடு அவர் கொடுத்த முத்தத்தையும் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். ஊரடங்கு உத்தரவு காரணமாக பல திரைபிரபலங்கள் இப்படி வீடியோ சாட் செய்து வருவது குறிப்பிடத்தக்கது. ரம்யா கிருஷ்ணன் பேசிய அந்த புகைப்படம் தற்போது வைரல் ஆகி வருகின்றது.