பொம்பளைங்கனா அதுக்கு மட்டும் தானா..? - மறுபக்கத்தை காட்டிய மாஸ்டர் மாளவிகா - இம்புட்டுகோவம் ஆவதும்மா..!


நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள "மாஸ்டர்" திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்திருப்பவர் மாளவிகா மோகனன். மாஸ்டர் படத்தின் பணிகள் அனைத்தும் முடிந்து விட்டாலும் கொரோனா ஊரடங்கு காரணமாக படம் வெளிவரவில்லை. 

ரிலீஸ் தேதி, டீசர் தேதி என எதுவும் குறிப்பிடப்படாமல் அப்படியே கிடப்பில் போடப்பட்டுள்ளது மாஸ்டர். இதனால் கொரோனா ஊரடங்கு காலத்தில் மாஸ்டர் படக் குழுவினர் வீட்டில் எப்படி இருப்பார்கள் என்பதை ஒரு ரசிகர் கற்பனை கார்டூனாக வரைந்து அதனை விஜய், விஜய் சேதுபதி, லோகேஷ் கனகராஜ் மாளவிகா மோகனன் ஆகியோருக்கு அனுப்பி வைத்தார். 

மற்றவர்கள் அந்த கார்டூனை ரசிக்க, மாளவிகா மட்டும் செம்ம கடுப்பானார். காரணம் மற்றவர்கள் படித்துக் கொண்டும், லேப்டாப், செல்போன் பார்த்துக் கொண்டும், விளையாடிக் கொண்டும் இருக்க, மாளவிகா மட்டும் சமையல் செய்து கொண்டிருப்பது போல இருந்தது. 

பெண்கள் என்றால் சமைப்பதற்கு மட்டும் தானா இந்த பாலியில் வேறுபாடு எப்போது தான் தீருமோ..? என்று புதுமைப்பெண்ணாக ஒரு கர்ஜனையை வெளியிட்டுள்ளார். இதனை தொடர்ந்து அந்த ரசிகர் அந்த கார்டூனை நீக்கிவிட்டு புதிதாக ஒரு கார்டூனை வெளியிட்டார். 

இதில் மாளவிகா புத்தகம் படிப்பது போன்று சித்தரித்துள்ளார். "இந்த கார்டூனை நான் மிகவும் விரும்புகிறேன். மேலும் எனக்கு படிப்பது பிடிக்கும் என உங்களுக்கு எப்படி தெரியும்" என்றும் அந்த ரசிகரை கேட்டுள்ளார்.

இருந்தாலும், சமைப்பது போல ஒரு கார்ட்டூன் பதிவு செய்ததற்கு இம்புட்டு கோவம் ஆவது மாலுமா என்று ரசிகர்கள் அவரை கூல் செய்து வருகிறார்கள்.

Previous Post Next Post
--Advertisement--