நடிகை அமலா பால், மும்பையை சேர்ந்த பாடகர் பவ்னிந்தர் சிங் உடன் தொடர்பில் இருப்பதாக பல தகவல்கள் வெளியாகின. அதனை உறுதிப்படுத்தும் வகையில் சில புகைப்படங்களுடன் சமூக வலைதளங்களில் புதிய தகவல் வைரலாகி வருகிறது.
பவ்னிந்தர் சிங் தனது இன்ஸ்டா பக்கத்தில், ஒரு பெண்ணை கட்டிப் பிடித்து காதலி என பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், இருப்பது அமலா பால் தான் என்று ரசிகர்கள் கூறுகின்றனர்.
முன்னதாக அமலா பால், தான் ஒருவரை காதலிப்பதாகவும், அவர் தன்னை அம்மா போல் பார்த்துக் கொள்கிறார் என்று கூறியிருந்தார். விரைவில் அது குறித்து அறிவிப்பேன் என்றும் பேசியிருந்தார்.
இந்நிலையில் அந்த நபர் பாடகர் பவ்னிந்தர் சிங் தான் என்று கூறப்படுகிறது. இதுகுறித்து அமலா பால் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார் என எதிர்பார்த்து ரசிகர்கள் காத்திருந்த நிலையில் இருவரும் திருமணம் செய்து கொண்ட புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை ஷாக் ஆக்கியது.
ஊரடங்கு காரணமாக தனிமையில் இருக்கும் நடிகைகள் எப்போதும் இல்லாத அளவுக்கு சமையல் செய்வது, வீட்டை சுத்தம் செய்வது உள்ளிட்ட வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்கள்.
அந்த வகையில், நடிகை அமலாபால் கோடை மழையை கொண்டாடும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். பேன்ட் அணியாமல் வெறும் டாப்ஸ் மட்டும் அணிந்து கொண்டு மாமரத்தை சுற்றி குதுகலிக்கும் அவரது வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.