கட்டிலில் சிறுவனிடம் ஏமாந்து போன கன்னக்குழி நடிகை ஸ்ருஷ்டி டாங்கே..!
இயக்குனர் கணேஷ்பாபு இயக்கி நடிக்கும் "கட்டில்" என்ற படத்தில் கதாநாயகியாக நாயகியாக ஸ்ருஷ்டி டாங்கே நடிக்கிறார். இப்படக்குழு, படத்தின் பிரமோஷனுக்காக ஏற்கனவே, கொரோனா விழிப்புணர்வு கவிதை போட்டியை அறிவித்தது.
இந்நிலையில், சிறுவர்களுக்கான கொரோனா விழிப்புணர்வு நடன போட்டி ஒன்றை அறிவித்துள்ளது. இது குறித்து, நடிகை ஸ்ருஷ்டி டாங்கே கூறும்போது, 'இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா, கொரோனா விழிப்புணர்வு பாடல் ஒன்றை உருவாக்கி உள்ளார்.
இதற்கேற்ப நடனமாடி, வீடியோ அனுப்பும் சிறுவர்களில், மூவரை தேர்ந்தெடுத்து பரிசளிப்போம். விரைவில் முழு விபரத்தை வெளியிடுவோம் என்று கூறியுள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர், "கட்டில்" படத்தில், எனக்கு மகனாக
நடிப்பதற்காக, ஒரு சிறுவனை அழைத்து வந்தனர். அந்த சிறுவன், அத்தனை அழகாக,
துருதுருவென இருந்தான். நடிப்பிலும் நல்ல திறமை.
ஆனால், அவனுடன் நடித்த சில நாட்கள் பிறகுதான் நான் ஏமாந்து போனது. ஆம், எனக்கு மகனாக நடித்த அந்த சிறுவன் அல்ல, சிறுமி. இயக்குனர், கணேஷ்பாபுவின் மகள் அஞ்சனா
தமிழ்ச்செல்வி தான் எனக்கு மகனாக நடிக்கிறார் என்று தெரிந்தது.
இப்போது உள்ள சிறுவர்கள் எல்லாம் மிகுந்த திறைமையுடன் இருக்கிறார்கள். அவர்களுக்கான சிறுவாய்ப்பு தான் இப்படியான கவிதை போட்டி மற்றும் நடனப்போட்டி '' என்று கன்னக்குழி
புன்னகையுடன் கூறுகிறார் ஸ்ருஷ்டி.
கட்டிலில் சிறுவனிடம் ஏமாந்து போன கன்னக்குழி நடிகை ஸ்ருஷ்டி டாங்கே..!
Reviewed by Tamizhakam
on
April 29, 2020
Rating:
