ஜோதிகாவை தொடர்ந்து திரிஷாவும் - குவியும் எதிர்ப்பு..!


உலகம் முழுதும் ஏற்பட்டுள்ள கொரோனா பாதிப்பால் விதிக்கப்பட்ட ஊரடங்கு தடையை தற்போதைக்கு நீக்கி விட்டாலும், மக்கள் அதிகம் கூடும் இடங்களான தியேட்டர்கள் மற்றும் ஷாப்பிங் மால்களை திறக்க சில மாதங்கள் ஆகும் என்றும் கூறப்படுகிறது. 

இதனால், சினிமா துறையினருக்கு பெருத்த ஏமாற்றம். தமிழ்நாட்டில் வெளியானாலும் உலகம் முழுக்க இருக்கும் கொரோனா பிரச்சனை காரணமாக படத்தின் வசூலில் பாதியை இந்தியா அல்லாதா வெளிநாடுகளில் இருந்து பெறுவது என்பது இன்னும் ஒரு ஆண்டுக்கு சிக்கல் தான்.

இந்நிலையில், ஜோதிகா நடித்து திரைக்கு வர இருந்த 'பொன்மகள் வந்தாள்' படத்தை இணையதளத்தில் வெளியிடுகின்றனர். இதற்கு தயாரிப்பாளர்கள் ஆதரவும், தியேட்டர் உரிமையாளர்கள் எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர். 

ஜோதிகா படத்தை தொடர்ந்து அதே முறையில் மேலும் 5 படங்கள் ஆன்லைன் தளத்தில் விற்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் திரிஷா நடித்து நீண்ட நாட்களாக கிடப்பில் உள்ள 'பரமபதம் விளையாட்டு' படத்தையும் இந்த தளத்தில் வெளியிட பேசி வருகின்றனர். 

ஏற்கனவே பலமுறை ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு கடைசி நேரத்தில் தள்ளி வைக்கப்பட்ட இப்படத்தை இதில் வெளியிடலாம் எனவும் படத்தின் செலவை விட அதனுடைய வட்டி அதிகமாகி கொண்டே போவதால் தயாரிப்பாளர் இது குறித்து யோசித்து வருவதாக கூறப்படுகிறது.

இது தியேட்டர் உரிமையாளர்களிடையே பெரும் எதிர்ப்பை கிளப்பியுள்ளது.

--- Advertisement ---