96 திரைப்படத்தில் விஜய் சேதுபதியின் மாணவியாக நடித்து, இளவட்டங்களை கவர்ந்தவர் நடிகை வர்ஷா பொல்லம்மா. 2015ல் சதுரன் படம் மூலம் தமிழ் சினிவாமில் ஹீரோயினா அறிமுகமான இவருக்கு பெரிய அடையாளத்தை ஏற்படுத்திக்கொடுத்தது 96 திரைப்படம்.
இதையடுத்து இவர் தமிழில் பிஸியாக நடிக்கத் தொடங்கி இருக்கிறார். வெற்றிவேல், யானும் தீயவன், சீமத்துரை போன்ற படங்களில் நடித்ததுடன் விஜய்யின் பிகில் படத்தில் கால்பந்தாட்ட வீராங்கனையாக நடித்தார்.
இணையதள பக்கத்தில் இணைந்திருக்கும் வர்ஷா மென்மை யான போக்கையே கடைபிடித்து வருகிறார். சமூக வலைதள பக்கத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர் தன்னுடைய லேட்டஸ்ட் புகைப்படங்களை பதிவு செய்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.
தற்போது ஊரடங்கு அமலில் இருக்கும் இந்த வேளையில், சூரியனை திண்பது போல ஒரு வீடியோவை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள்.. க்யூட்.. அழகு.. என்று உருகி வருகிறார்கள்.


