ஓவியா பெயரில் இணையத்தில் தீயாய் பரவும் மோசமான வீடியோ...? - ரசிகர்கள் ஷாக்..! - உண்மை என்ன..?


களவாணி படம் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானவர் நடிகை ஓவியா. களவாணி படம் மாபெரும் வெற்றிபெற்றதை தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் நடித்தார். 

அதன்பின்னர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மக்கள் மத்தியில் பிரபலமானார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் இவரது இயல்பான கேரக்டரை பார்த்த ரசிகர்கள் ஓவியாவை கொண்டாடினார்கள். 

பிக் பாஸ் வீட்டில் இவர் படும் கஷ்டங்களுக்கு ஆறுதலாக சமூக வலைத்தளங்களில் ஓவியா ஆர்மி அமைத்து கொண்டாடினார்கள் ரசிகர்கள். பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய ஓவியாவுக்கு தமிழகம் முழுவதும் ரசிகர்கள் குவிந்தனர். மேலும் அடுத்ததடுத்த படங்களில் பிசியாக நடிக்க ஆரம்பித்தார் ஓவியா.

ஆனால், எப்படி 200 வருஷமாக ஓடிக்கொண்டிருந்த கடிகாரத்தைநேசமணியின் அப்ரெண்டீஸ்கள் அந்தரை சிந்தரையாக உடைத்தார்களோ.. அது போல 90 ML என்ற ஒரே ஒரு படத்தில் நடித்து தன்னுடைய ஒட்டுமொத்த நல்ல பெயரையும் சல்லி சல்லியாக நொறுக்கிக்கொண்டார் ஓவியா.

இவருக்கு திடீரென உருவாகிய ரசிகர் வட்டம் திடீரென காணாமல் போனது. தற்போது, ஆரவ்-வின் ராஜ பீமா படத்தில் கௌரவ தோற்றத்தில் ஒவியாகவே நடிக்கிறார் ஓவியா. அதனை தொடர்ந்து, மலையாளத்தில் ப்ளாக் காபி என்ற ஒரு படம் மட்டும் உள்ளது.

தமிழ் சினிமாவில் எங்கோ போகப்பகிறார் என்று பேசப்பட்ட, எதிர்பார்க்கப்பட்ட இவர் எங்கே போனார் என்றே தெரியாமல் போய் விட்டது. இந்நிலையில், இவருடைய பெயரில் மோசமான வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது.

உண்மையில் அந்த வீடியோவில் இருப்பது ஒவியாவே அல்ல. அவரை போலவே முகபாவனை கொண்ட ஒரு பெண். ஆனால், சில விஷமிகள் இது ஓவியா தான் என இணையத்தில் பரவவிட்டு வருகிறார்கள்.