தன்னுடைய ட்ரெஸ்-ஐ மகனுக்கும், மகனின் ட்ரெஸ்-ஐ தானும் போட்டுக்கொண்டு ஆட்டம் போடும் கனிகா..! - வைரல் வீடியோ..!


நடிகர் அஜித்தின் வரலாறு படத்தில் அஜித்திற்கு ஜோடியாக நடித்த கனிகா 2002ம் ஆண்டு வெளியான பைவ் ஸ்டார் படம் மூலம் அறிமுகமானார் . 

இவர் தமிழில் தொடர்ந்து எதிரி, ஆட்டோகிராப் , வரலாறு போன்ற திரைப்படங்களிலும் நடித்திருந்தார்.கனிகா கடைசியாக தமிழில் ஓ காதல் கண்மணி என்ற படத்தில் நடித்து இருந்தார். 

இதன் பிறகு பட வாய்ப்புகள் குறைந்து விட்டது.இதனால் அமெரிக்காவை சேர்ந்த ஒருவரை திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆகி விட்டார். எனினும், அடிக்கடி சமூகவலைத்தளங்களில் புகைப்படம் வெளியிடுவதில் ஆர்வம் காட்டி வந்தார்.

இந்நிலையில் அவரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில், தன்னுடைய உடையை மகனுக்கும், மகனின் உடையை தானும் அணிந்து கொண்டு நடனம் ஆடும் வீடியோ ஒன்றை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.

--- Advertisement ---