சமூக வலைதளங்களில் அனேக நடிகைகள் கணக்கு வைத்துள்ளனர். ரசிகர்களுடன் தொடர்பு கொள்ள வேண்டும் என்றால் தொலைக்காட்சி, பேப்பர், வானொலி மட்டும் தான் என்ற நிலை இப்போது இல்லை.
வலைத்தளம் மூலம் பிரபலமாகி முன்னணி நடிகருக்கே ஜோடியாகி விடலாம் எனும் அளவுக்கு சமூக வலைதளங்கள் உள்ளன . அதற்கு சிறந்த எடுத்துக்காட்டு நடிகை மாளவிகா மோகனனை சொல்லலாம்.
சமூக வலைதளங்களில் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வந்த போது நெட்டிசன்கள் தவிர பல சினிமா ரசிகர்களுக்கு இவர் யார் என்றே தெரியாது. ஆனால், சமூக வலைத்தளம் இவருக்கு மிகப்பெரிய வாய்பை பெற்றுக்கொடுத்தது.
முதல் படமே சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு தங்கையாகவும், சசிகுமாருக்கு ஜோடியாகவும் நடித்தார். அடுத்த படமே நம்ம தளபதி விஜய்யோடு. பல நடிகைகள் கனவு மட்டுமே கண்டு கொண்டிருக்கும் ஒரு விஷயம் இவர் வாழ்கையில் நிஜமாகவே நடந்து விட்டது.
இதனால், சமூக வலைத்தளங்களை நடிகைகள் அதிக அளவில் பயன்படுத்துகிறார்கள். அந்த வகையில், பாலிவுட் நடிகர் ஆஞ்சல் அகர்வால் என்பவர் சமீப காலமாக ஆக்டிவாக இருக்கிறார்.
ரசிகர்களின் எல்லா விதமாக கேள்விகளுக்கும் பதில் கொடுக்கும் அம்மணி. கோக்கு மாக்கான கேள்வி கேட்கும் அசடுகளுக்கு சுளுக்கடி பதில் கொடுக்கிறார்.
Tags
Aanchal Agrawal