ஒரு காலத்தில் இளைஞர்களின் கனவுகன்னியாக வலம் வந்தவர் நடிகை நதியா. 80-களில் வெளியான படங்களின் மூலம் அனைவரின் மனதையும் ஆட்கொண்டவர்.
200க்கும் அதிகமான படங்களில் நடித்திருக்கிறார். இப்போது இவருக்கு 54 வயதாகின்றது. திருமணத்துக்கு பிறகு நீண்ட இடைவெளிவிட்டு, ஜெயம் ரவியின் ‘எம்.குமரன் சன் ஆப் மகாலட்சுமி’ படத்தின் மூலமாக தமிழில் ரீ எண்ட்ரி கொடுத்தார்.
இதனை தொடர்ந்து பல்வேறு படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வந்தார். நதியா இன்றும் அதே பொலிவுடனும் உற்சாகத்துடனும் திரையில் தோன்றுவதே அவரின் தனித்துவம்.
வெள்ளிதிரையில் வெற்றி வாகை சூடிய நதியா தற்போது சின்னத்திரையில் கால் பதித்துள்ளார். இந்நிலையில், தன்னுடைய இரண்டு மகள்கள் ஷனம் மற்றும் ஜனா-வுடன் அவர் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களை ஷாக் ஆகி வருகின்றது.
நிஜமாகவே அவர்களுக்கு நீங்கள் அம்மா-வா..? இல்லை அக்கா-வா..? என்று கேட்டு வருகிறார்கள் நெட்டிசன்கள்.