தமிழில் நீ தானா அவன் எனும் திரைப்படம் மூலம் ஐஸ்வர்யா ராஜேஷ் அறிமுகமாகியிருந்தாலும், ரம்மி, பண்ணையாரும் பத்மினியும், காக்கா முட்டை போன்ற படங்கள் இவருக்கு பெரிதும் பேயரை தேடிக் கொடுத்தன.
அதன் பிறகு தொடர்ச்சியாக கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து அதற்கேற்ற படங்களில் நடித்து வருகிறார் ஐஸ்வர்யா ராஜேஷ். இவரை தங்களது படங்களில் நடிக்க வைக்க இயக்குனர்கள் வரிசைகட்டி நிற்கின்றனர்.
இந்நிலையில், சமீபத்தில் வெள்ளை நிற சட்டை அணிந்து கொண்டு அதனை ஒரு பக்கம் கழட்டி விடுவது போல படு கவர்ச்சியாக போஸ் கொடுத்து அதன் புகைப்படங்களை தனது சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார் ஐஸ்வர்யா ராஜேஷ்.
இதற்கு ரசிகர்கள் "உங்களது மறு ஒரு பக்கத்தை காண்கிறோம். இதுவும் சிறப்பாக உள்ளது" என பாராட்டியும், ஒரு சிலர் "ஆத்தாடி மோசமான பார்வையால்ல இருக்கு.." என சிலாகித்தும் வருகிறார்கள்.