தமிழ் சினிமாவில் கேடி படத்தின் மூலம் அறிமுகமாகி, கல்லூரி படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகை தமன்னா.
இவர் விஜய், அஜித் என பல முன்னணி நடிகர்களோடு நடித்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம் என பல மொழிகளிலும் நடித்துள்ளார்.
இந்நிலையில் நடிகையாக கலக்கி வந்த தமன்னா தற்போது ஒரு சில படங்களில் ஒரு பாடலுக்கு மட்டும் குத்தாட்டம் போட்டு வருகிறார்.
கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் இந்தியா முழுவதும் வருகின்ற மே 3-ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. வீட்டிலேயே முடங்கி கிடக்கும் நடிகைகள் பொழுதுபோக்க விதவிதமான சவால்களை உருவாக்கி வருகின்றனர்.
சில தினங்களுக்கு முன் பில்லோ சேலஞ்ச் வைரலானது. அதாவது உடலை தலையணையால் மறைக்கும் சவால். இதை ஏற்கனவே சுரபி உள்ளிட்ட பல நடிகைகள் செய்தனர்.




