தமிழ் சினிமாவில் 90'ஸ் காலகட்டத்தில் இளசுகளின் கனவுக்கன்னியாக வலம் வந்தவர் நடிகை மீனா. "அன்புள்ள ரஜினிகாந்த்" என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர்.
ஆனால், காலத்தில் கோலம் பாருங்க, "எமஜான்" படத்தில் ரஜினிக்கே ஜோடியாகவும் நடித்தார். அந்த படத்த்தின் மூலம் ரசிகர்களிடம் பிராலமான அவர் அடுத்தடுத்து ஹிட் படங்களில் நடித்து முன்னணி நடிகையானார்.
கமல், சத்யராஜ், சரத்குமார், ராஜ்கிரண், பிரபு உள்ளிட்டோரின் பேவரைட் ஹீரோயினாக உயர்ந்தார். நடிகர் அஜித்துடன் ஆனந்த பூங்காற்றே, வில்லன் என இரண்டு படங்களில் மீனா நடித்தார்.
சமீபத்தில், வில்லன் திரைப்படம் தொலைகாட்சில் ஒளிபரப்பு செய்யப்பட்டது. இதை பார்த்ததும் மீனாவுக்கு வில்லன் படத்தில் நடித்த போது நடந்த விஷயங்கள் நியாபகத்திற்கு வரவே, அவற்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மீனா பகிர்ந்துள்ளார்.
அதில் அவர் கூறியுள்ளதாவது, அந்த படத்தில் இடம்பெற்ற "அடிச்சா நெத்தி அடியா அடிப்பேன்.." என்ற பாடலுக்கு நடனமாடிவிட்டு, மறுநாள் பெட்டில் இருந்து எழக்கூட முடியாமல் போய்விட்டதாக மீனா தெரிவித்துள்ளார்.
அந்த படத்தின் மற்றொரு பாடலான "ஒரே மனம்... ஒரே குணம்.." பாடல் பற்றிய அனுபவத்தையும் மீனா பகிர்ந்துள்ளார். ஒரே மனம் பாடல் எனக்கு மிகவும் பிடித்த பாடல்களில் ஒன்று. இ
ந்த பாடல் படப்பிடிப்பின் போது திடீரென கடுமையான பனிமழை பொழிய தொடங்கிவிட்டது. இதனை, யாரும் எதிர்பார்க்கவில்லை. ஆனால், அந்த குளிரை தாங்கும்படியான ட்ரெஸ்ஸை அணியவில்லை. காலில் ஷூ கூட இல்லை. பனியில் உறைந்து போய்விடுவேனோ என பயந்துவிட்டேன் அந்த அளவுக்கு குளிர்.
மேலும், இந்த பாடலுக்கு நாங்கள் ஒத்திகை எதுவும் செய்யவில்லை. அப்படியே நடித்து படமாக்கினோம். என கூறியுள்ளார்.