விஜய் படங்கள் என்றால் பிரச்சனை இல்லாமல் ரிலீஸ் ஆகாது என்பது எழுதப்படாத விதி. சொல்லப்போனால், அவரது படங்கள் வெளியாகும் போது ஏற்படும் சிக்கல்கள் தான் படத்திற்கு ப்ரோமோஷன்.
இவரது படங்கள் சுமார் என்ற ரகத்தில் இருந்தாலே 200 கோடி என்ற வசூலை ஒரு வாரத்தில் தொட்டு விடுகின்றது. இதனால், மாஸ்டர் படத்தை தயாரிக்க தன்னுடைய மாமா சேவியர் பிரிட்டோவை தயாரிப்பாளராக்கினார் விஜய்.
இதனை தொடர்ந்து படம் ஆரம்பிக்கபட்ட சில வாரங்களிலேயே படத்தின் அனைத்து உரிமைகளையும் மிளகாய் பஜ்ஜி கணக்காக விற்று விட்டார்கள். சுமார் 200 கோடி ரூபாய்களை படம் தயாரிக்கும் முன்பே வசூல் செய்தார் விஜய்யின் மாமா சேவியர் பிரிட்டோ.
வசூல் ஆன அந்த பணத்தை வைத்தே முழு படத்தையும் எடுத்து முடித்துள்ளது தான் இங்கு வேடிக்கையே. இதில், நடிகர் விஜய்க்கு அதிகாரப்பூர்வமாக கொடுக்கப்பட்ட சம்பளம் மட்டும் 80 கோடி. பிகில் படத்திற்கு அதிகாரப்பூர்வமாக 30 கோடி சம்பளம் வாங்கிய விஜய் அடுத்த படமான மாஸ்டர் படத்திற்கு 80 கோடி சம்பளம் வாங்கியுள்ளார்.
கொரோனா வைரஸ் தொற்றால் உலகம் முழுதும் உள்ள திரையரங்குகள் மூடப்பட்டுள்ள இந்த நிலையில் மாஸ்டர் படம் இப்போதைக்கு வெளியாகும் நிலையில் இல்லை. அநேகமாக, மே அல்லது ஜூன் மாதம் வரை ரிலீஸ் ஒத்திவைக்கப்படலாம்.
அதுவும் இப்போதைக்கு சொல்ல முடியாது. கொரோனா வைரஸ் தொற்றின் தீவிரம் குறைந்தாலும், அதனை குணமாக்கும் மருந்தோ அல்லது தடுப்பு மருந்தோ கண்டுபிடிக்கப்படாமல் திரையரங்குகள் திறக்கப்படமாட்டாது. அப்படியே திறந்தாலும் மக்கள் திரையரங்குகளுக்கு வருவார்களா..? என்பது சந்தேகமான விஷயம்.
இதனால், படம் முடியும் முன்பே பணத்தை கொடுத்து உரிமையை வாங்கிய விநியோகஸ்தர்கள் கலக்கத்தில் உள்ளனர். கடன் வாங்கி தான் அனைவரும் மாஸ்டர் படத்தை வாங்கியுள்ளனர். இதனுடைய வட்டி இரண்டு மாதங்களுக்கு கணக்கு போட்டால் எங்கோயோ போய் நிற்கும்.
இதனால், படத்தின் உரிமையை நாங்கள் திரும்ப கொடுத்து விடுகிறோம். பணத்தை கொடுத்து விடுங்கள். படம் எப்போது ரிலீஸ் ஆகின்றதோ அப்போது பார்த்துக்கொள்ளளாம் என விஜய் தரப்பிற்கு விநோயோகஸ்தர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இதனை கேட்ட விஜய் தரப்பு, கொஞ்சம் பொறுமையாக இருங்கள் பேசிக்கலாம் என்று கூலாக கூறியுள்ளனர்.
இதனால், கடுப்பான விநியோகஸ்தர்கள் பிரபல அரசியல் வாதி ஒருவரின் உதவியை நாட அவர் விஜய்யிடம் இருந்து பணத்தை திரும்ப பெற்று தரும் முயற்சிகளை முடுக்கி விட்டுள்ளாராம். இதனால், விஜய் தரப்பு அழுதத்திற்கு மேல் அழுத்தம் வந்துகொண்டிருகின்றது என கூறுகிறார்கள்.
விஜய் படங்களுக்கு அரசியல் வாதிகளால் இத்தனை நாட்களாக பிரச்சனை வந்து கொண்டிருந்தது. ஆனால், இந்த முறை தனக்கு தானே ஆப்பு வைத்துக்கொண்டிருக்கிறார் விஜய்.
Tags
Actor Vijay