" மரத்தை கண்டாலே இதை தான் செய்வேன் " - ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த நடிகை மாளவிகா.!


கேரளத்து பெண்ணான நடிகை மாளவிகா மோகனன், கடந்த 2013-ம் ஆண்டு மலையாளத்தில் துல்கர் சல்மான் நடித்த ‘பட்டம் போல’ படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். 

பின்னர் கன்னடம், இந்தி என பிற மொழி படங்களிலும் நடித்த அவர், தமிழில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்த பேட்ட படம் மூலம் அறிமுகமானார். 

பேட்ட படத்தில் சிறிய வேடத்தில் நடித்த மாளவிகா மோகனன், தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கி வரும் மாஸ்டர் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்து வருகிறார். இப்படத்தை தொடர்ந்து அவருக்கு பட வாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளது. 

உச்ச நடிகர்களுக்கு ஜோடியாக நடிக்கவும் பேச்சுவார்த்தை நடந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், ஹரி இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சமூகவலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர் அடிக்கடி தன்னுடைய புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார். மாஸ்டர் படத்தில் கமிட் ஆன பிறகு இவரை பின் தொடருபவர்களின் எண்ணிக்கை கிடுகிடுவென உயர்ந்து தற்போது 13 லட்சம் பேர் இவரை பின்தொடருகிறார்கள்.

இந்நிலையில், மரத்தை கட்டிப்பிடித்தபடி நிற்கும் புகைப்படத்தை வெளியிட்டு, " எங்காவது மரம் இருந்தால், அதை நான் கட்டிப்பிடித்தக்கொண்டு நிற்பதை காண்பீர்கள் " என்று தலைப்பிட்டு வெளியிட்டுள்ளார்.

" மரத்தை கண்டாலே இதை தான் செய்வேன் " - ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த நடிகை மாளவிகா.! " மரத்தை கண்டாலே இதை தான் செய்வேன் " - ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த நடிகை மாளவிகா.! Reviewed by Tamizhakam on April 22, 2020 Rating: 5
Powered by Blogger.