ஆன்லைனில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்ட "ஹீரோ" - என்ன காரணம்..? - பரபரப்பு தகவல்.!


நடிகர் சிவகார்த்திகேயன் கதாநாயகனாகவும், கல்யாணி பிரியதர்ஷன் கதாநாயகியாகவும், நடிகர் அர்ஜுன் முக்கியகதாபாத்திரத்தில் நடிக்க கடந்த 2019-ம் ஆண்டு வெளியான திரைப்படம் "ஹீரோ". 

இயக்குனர் மித்ரன் இயக்கியிருந்தார். இந்த படத்திற்கு ஏகப்பட்ட ப்ரோமோஷன்கள் நடைபெற்றது. ஆனால், ஒன்றும் வேலைக்கு ஆகவில்லை. சிவகார்த்திகேயனுக்கு ப்ளாப் படமாக அமைந்து விட்டது ஹீரோ.

படம் பப்படமாகிவிட்ட இந்த நிலையில் இப்படத்தின் கதை என்னுடைய என இயக்குனர் போஸ்கோ பிரபு என்பவர் நீதிமன்றத்தில் கதைத் திருட்டு வழக்கு தொடர்ந்திருந்தார். 

இந்த வழக்கில் கடந்த  மார்ச் 10,2020 அன்று, வேறு மொழிகளில் வெளியிட இப்படத்தை இடைக்காலத்தடை விதித்தும். டப்பிங் மற்றும் சாட்டிலைட் உரிமைகளுக்கும் இடைக்கால தடை விதித்தும் ஐகோர்ட் உத்தரவிட்டது. 

ஆனால், தடையையும் மீறி தெலுங்கில் சக்தி என்ற பெயரில் ஹீரோ படம் டப்பிங் செய்யப்பட்டு மார்ச் 20-ம் தேதி தெலுங்குத் திரையுலகில் வெளியாக உள்ளதாக விளம்பரங்கள் செய்யப்பட்டது. 

ஆனால், கொரோனா ஊரடங்கு உத்தரவால் இந்த படம் வெளியாகவில்லை. இதையடுத்து கடந்த மாதம் இறுதியில் அமேசான் பிரைம் என்ற இணையதளத்தில் ஹீரோ மற்றும் தெலுங்கில் உருவாக்கப்பட்ட சக்தி திரைப்படம் ஆகிய இரண்டும் பதிவேற்றம் செய்யப்பட்டது. 

இதுகுறித்து இயக்குனர் போஸ்கோ கூறும்போது, ”ஹீரோ” திரைப்படம் எந்த ஒரு வேற்று மொழியிலும் எந்த வகையிலும் வெளியிடுவதற்கும் மற்றும் ஹீரோ திரைப்படத்தை டிஜிட்டல், இணையதளம் மற்றும் சாட்லைட் தொலைக்காட்சி என எதிலும் வெளியாவதற்கு சென்னை ஐகோர்ட் இடைக்காலத் தடைவிதித்துள்ள நிலையில், திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கில் அமேசான் பிரைம் இணையதளத்தில் வெளியானது. இது நீதிமன்றத்தை அவமதிக்கும் செயல். 

இந்நிலையில், என்னுடைய வழக்கு சார்ந்த ஆவணங்களை அமேசான் ப்ரைமிற்கு அனுப்பினேன். இதனை ஏற்றுக்கொண்ட அவர்களை அவர்களுடைய தளத்தில் இருந்து ஹீரோ படத்தை நீக்கி விட்டார்கள் என்று தெரிவித்துள்ளார்.

ஆன்லைனில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்ட "ஹீரோ" - என்ன காரணம்..? - பரபரப்பு தகவல்.! ஆன்லைனில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்ட "ஹீரோ" - என்ன காரணம்..? - பரபரப்பு தகவல்.! Reviewed by Tamizhakam on April 18, 2020 Rating: 5
Powered by Blogger.