தமிழில் பிரபல நடிகையாக வலம் வருபவர் நடிகை ராய் லக்ஷ்மி. தாம் தூம், அரண்மனை, மங்காத்தா உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். ராகவா லாரன்ஸ் உடன் காஞ்சனா, மொட்ட சிவா கெட்ட சிவா உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார்.
ராய் லக்ஷ்மி தமிழ் மட்டுமின்றி இந்தியிலும் பிரபல நடிகையாக உள்ளார். இதேபோல் தெலுங்கு மலையாள மொழி சினிமாவிலும் பிஸியான நடிகையாக வலம் வருகிறார்.
தமிழில் தற்போது சிண்ட்ரெல்லா, மிருகா என இரண்டு படங்களில் நடித்து வருகிறார். இந்த படங்கள் விரைவில் திரைக்கு வரவுள்ளன. சின்ட்ரெல்லா திரைப்படம் ரிலீசுக்கு ரெடியாகி கொரோனா ஊரடங்கு காரணமாக ரிலீஸ் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கடந்த 2017ஆம் ஆண்டு பாலிவுட்டில் ஜூலி படத்தில் நடித்தார் ராய் லக்ஷ்மி. ஆனால், இந்த படம் எதிர்பார்த்த வரவேற்பை பெறாமல் மண்ணை கவ்வியது. இத்தனைக்கும், ஆடைகளை துறந்தும், படுக்கையறை மற்றும் லிப்லாக் காட்சிகள் நடித்து கவர்ச்சி காட்டை காட்டினார் அம்மணி. இந்த நிலையில், அண்மையில், உதட்டை அழகாக்குகிறேன் என்ற பெயரில் பிளாஸ்டிக் சர்ஜரி செய்தார்.
சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர் அவ்வப்போது பிகினி உடையில் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கிறநங்கடிப்பதை வழக்கமாககொண்டுள்ளார்.
அந்த வகையில், தற்போது சின்ட்ரெல்லா படத்தில் இருந்து ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் ராய் லக்ஷ்மி. இதில், கழுத்தில் சிலுவை, கையில் சிகரெட்என செம்ம மாஸான புகைப்படம் ஒன்றை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்துள்ளார் அம்மணி.
