"ஐஸ்க்ரீம் மேல செர்ரி வச்ச மாதிரி கும்முன்னு இருக்கீங்க" - குஷ்பு வெளியிட்ட புகைப்படம் - உருகும் குஷ்பு ரசிகர்கள்..!


90-களில் தமிழ் சினிமாவில் கவர்ச்சிக் கன்னியாக உலா வந்தவர் நடிகை குஷ்பு. இவர் சினிமாவில் அறிமுகமான காலத்தில் ஒல்லியாக இருந்தார். இதனால், நீச்சல் உடையில் இருந்து அங்க அழகுகள் அப்பட்டமாக தெரியும்படியான கவர்ச்சி உடைகள் வரை அதகளம் செய்தார்.

ஆனால், நாட்கள் செல்ல செல்ல உடல் எடை கூடினார். ஆனால், அதுவும் அவருக்கு பெரிய ப்ளஸ் பாயிண்டாக அமைந்தது. குடும்பப்பாங்கான வேடங்களில் நடிக்க அது அவருக்கு உதவியாக இருந்தது.

ஆனால், உடல் எடை கூடினாலும் நான் கவர்ச்சியாக நடிப்பேன் என மீண்டும் ஒரு கலக்கு கலக்கினார் அம்மணி. ஒரு கட்டத்தில் சினிமா வாய்புகள் குறைந்து போகவே அரசியலுக்குள் நுழைந்தார் அம்மணி. அரசியல் பிரவேசம் என்பது போர்க்களத்தை முதன் முதலில் காணும் அனுபவம் போன்றதாகவே இருந்திருக்க வேண்டும். 

இடையில், பெண்கள் திருமணத்திற்கு முன்பே பல ஆண்களுடன் உறவு வைத்துக்கொள்வது குறித்து அவர் அளித்த பேட்டி அரசியல் கட்சிகள் மற்றும் பல்வேறு அமைப்புகள் மத்தியில் பெரும் எதிர்ப்பை கிளப்ப அதன் விளைவாக வெவ்வேறு நீதிமன்றங்களில் தொடரப்பட்ட 22 வழக்குகளை அவர் சந்திக்க நேர்ந்தது.

இதிலிருந்து எஸ்கேப் ஆனால் போதும் என பிரபல கட்சியில் தன்னை நட்சத்திர பேச்சாளாராக இணைத்துக்கொண்டார். இப்போது, சினிமா, அரசியல் என இரட்டை குதிரை சவாரி செய்து வருகிறார்.


தற்போது, அண்ணாத்த படத்தில் முக்கிய கதாபத்திரத்தில் நடித்து வரும் குஷ்பு சமூக வலைதள பக்கங்களில் செம்ம ஆக்டிவாக இருக்கிறார். இவர் சமீபத்தில், குங்குமப்போட்டு வகிடு எடுத்து சீவிய கூந்தல் என பக்காவான ஒரு சில புகைப்படங்களை வெளியிட குஷ்பு வெறியர்கள் சிலர் ஐஸ்க்ரீம் மீது செர்ரி பழம் வைத்தது போல கும்முன்னு இருக்கீங்க என கருத்து தெரிவித்து வருகிறார்கள்..

"ஐஸ்க்ரீம் மேல செர்ரி வச்ச மாதிரி கும்முன்னு இருக்கீங்க" - குஷ்பு வெளியிட்ட புகைப்படம் - உருகும் குஷ்பு ரசிகர்கள்..! "ஐஸ்க்ரீம் மேல செர்ரி வச்ச மாதிரி கும்முன்னு இருக்கீங்க" - குஷ்பு வெளியிட்ட புகைப்படம் - உருகும் குஷ்பு ரசிகர்கள்..! Reviewed by Tamizhakam on April 09, 2020 Rating: 5
Powered by Blogger.