நடிகரும், மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியின் தலைவருமான கமல்ஹாசனின் மகள் ஸ்ருதி ஹாசனை சுற்றி எப்போது ஏதாவது ஒரு சர்ச்சை வட்டமடித்து கொண்டே இருக்கும்.
அந்த வகையில், தற்போது எனக்கு இதனுடைய வாசனை பிடிக்கும் எனக் கூறி புதிய சர்ச்சைக்கு வழி வகுத்திருக்கிறார். சமூலவலைதளத்தில் ரசிகர்களுடன் சமீபத்தில் உரையாற்றினார் ஸ்ருதிஹாசன்.
அப்போது, தனக்கு மிகவும் பிடித்த வாசனைகள் என சிலவற்றை அவர் குறிப்பிட்டார். "ரோஸ், சாக்லேட், கேதுரு மரத்தின் வாசம், பென்சில் துகள்கள், புதிய தோள் பொருட்கள், சிகரெட் வாசனை " என தனக்கு பிடித்த வாசனைகளை அவர் வரிசைப்படுத்தியிருந்தார்.
சமீபத்தில், தான் மது குடிக்கும் பழக்கத்தில் இருந்து முழுவதுமாக விடுபட்டதாக ஸ்ருதிஹாசன் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


